11 மாத குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்த தாய்.. கணவரின் துன்புறுத்ததால் பெண் விபரீத முடிவு!
Mother Killed 11 Months Old Baby | தெலங்கானாவில் கணவரின் துன்புறுத்தல் தாங்காமல் தனது 11 மாத பச்சிளம் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய், பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நல்கொண்டா, ஜனவரி 11 : தெலங்கானா (Telangana) மாநிலம், நல்கொண்டா மாவட்டம், ராமண்ணா பேட்டையை சேர்ந்தவர் யஷ்வந்த் ரெட்டி. இவருக்கு திருமணமாகி சுஷ்மிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்த நிலயில், அஸ்வந்த் நந்தன் என்ற 11 மாத பச்சிளம் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக சுஷ்மிதா தங்களது 11 மாத குழந்தையை விஷம் வைத்து கொலை செய்துள்ளார்.
11 மாத குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்த தாய்
இந்த தம்பதி அஸ்தினாபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், குழந்தை பிறந்தது முதலே சுஷ்மிதாவை வெளியே செல்லக்கூடாது என்றும், யாரிடமும் பேசக்கூடாது என்றும் யஷ்வந்த் துன்புறுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அதன் காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்த சுஷ்மிதா, கணவர் அலுவலகத்திற்கு சென்றதும் தனது 11 மாத பச்சிளம் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க : 2 பிள்ளைகளை கழுத்தை நெருக்கி கொலை செய்த தந்தை.. தானும் விபரீத முடிவு.. தெலங்கானாவில் பகீர் சம்பவம்!
தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட் சுஷ்மிதா
குழந்தையை கொலை செய்த நிலையில், அவர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அதனை கண்ட சுஷ்மிதாவின் தாய் லலிதா என்ற 50 வயது பெண்ணும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த நிலையில், அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் லலிதாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : இந்தியாவில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு.. அரசு முக்கிய அறிவிப்பு!
வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தாய் மற்றும் குழந்தையின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழாக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கணவரின் துன்புறுத்தல் தாங்காமல் சுஷ்மிதா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.