AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தற்கொலை செய்ய ஆற்றுக்குள் குதித்த பெண்.. முதலை கடித்ததால் கூச்சல்.. காப்பாற்றிய பொதுமக்கள், காவல்துறை!

Woman Survives Crocodile Attack During Suicide Attempt | கர்நாடகாவில் மன உளைச்சல் காரணமாக பெண் ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்த நேரம் பார்த்து அவரை முதலை தாக்கியதால் கத்திய அந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தற்கொலை செய்ய ஆற்றுக்குள் குதித்த பெண்.. முதலை கடித்ததால் கூச்சல்.. காப்பாற்றிய பொதுமக்கள், காவல்துறை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Nov 2026 00:19 AM IST

தட்சிண கன்னடா, நவம்பர் 07 : கர்நாடகாவில் (Karnataka) தற்கொலை செய்துக்கொள்வதற்காக ஆற்றில் குதித்த பெண்ணை அந்த பகுதி மக்கள் மற்றும் காவல்துறையினர் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குமாரதாரா (Kumaradhara) பாலத்திற்கு அருகே நடைபெற்றுள்ளது. தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்த அந்த பெண் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மன உளைச்சல் காரணமாக ஆற்றில் குதித்த பெண்

இந்த சம்பவம் குமாரதாரா பாலத்திற்கு அருகே, நவம்பர் 04, 2026 அன்று நடைபெற்றது. தகவல்களின்படி, அந்த பெண் தனது தனிப்பட்ட சிக்கல்கள் காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான், அவர் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்காக ஆற்றில் குதித்துள்ளார். அப்போது, அந்த ஆற்றில் இருந்த முதலை ஒன்று அவரை கடிக்க முயன்றுள்ளது. இதனால், அவருக்கு உடலில் சில இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. முதலை கடித்ததன் காரணமாக அவர் வலியால் அலறி துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் அந்த பெண் முதலையிடம் சிக்கியுள்ளது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : கல்விக்கான செலவினம்… 60 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கோத்தாரி ஆணையத்தின் இலக்கு!

முதலை கடித்ததால் வலி தாங்க முடியாமல் உதவி கேட்ட பெண்

அந்த பெண் தன்னை முதலை கடித்த பிறகு வலியால் அலறி துடித்துள்ளார். அந்த ஆற்றுக்கு அருகே உள்ள லாட்ஜில் பணியாற்றிக்கொண்டு இருந்த ஊழியர்கள் அவரது அலறல் சத்தம் கேட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த பெண்ணை மீட்கும் பணிகளில் இறங்கியுள்ளனர். காவல்துறையினர் மற்றும் ஊர் மக்கள் இணைந்து மேற்கொண்ட முயற்சியின் காரணமாக அந்த பெண் சிறிய காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : 20 நாட்களில் 7 கொலைகள்.. செல்போனில் அழைத்து மனைவி குடும்பத்தை காலி செய்த டாக்ஸி ஓட்டுநர்!

முதலையால் உயிரி பிழைத்த பெண்

தனது வாழ்க்கையில் தனக்கு இருந்த மன கசப்புகள் காரணமாக இனி வாழவே கூடாது என முடிவு செய்த பெண், தற்கொலை செய்துக்கொள்வதற்காக ஆற்றில் குதித்த நிலையில், முதலலை கடித்ததால் அலறியதன் மூலம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு எடுத்த பெண், தானே கத்தி கூச்சலிட்டு தன்னை மீட்க வழிவகை செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகவும் பேசுபொருளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us