AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு? திரிணாமுல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்.. தேர்தல் ஆணையம் அதிரடி..

TMC Symbol Freezed: அக்டோபர் 6ஆம் தேதி மேற்கு வங்கத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜினகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இரு அணிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், இடைத்தேர்தலுக்கு முன் முழுமையான விசாரணையை முடிக்க போதிய அவகாசம் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு? திரிணாமுல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்.. தேர்தல் ஆணையம் அதிரடி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Sep 2026 07:04 AM IST

செப்டம்பர் 18, 2026: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதலுக்கு இடையே, அக்கட்சியின் பெயர் மற்றும் தேர்தல் சின்னத்தை தற்காலிகமாக முடக்கி தேர்தல் ஆணையம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெயர் சின்னம் முடக்கம்:

‘அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற பெயரையும், கட்சியின் ‘இரட்டை மலர்-புல்’ சின்னத்தையும் இரு அணிகளும் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான அணி மற்றும் அரூப் ராய் தலைமையிலான மற்றொரு அணி என இரு தரப்பும் கட்சியின் உரிமையை கோருவதால், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் 15-வது பிரிவின் கீழ் இந்த விவகாரத்தை விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது.

மேலும் படிக்க: ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசம்.. மத்திய அரசு அறிவிப்பு!

அக்டோபர் 6ஆம் தேதி மேற்கு வங்கத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜினகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இரு அணிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், இடைத்தேர்தலுக்கு முன் முழுமையான விசாரணையை முடிக்க போதிய அவகாசம் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சுயேட்சை சின்னங்கள் தேர்வு செய்ய அறிவுறுத்தல்:

இதையடுத்து, இரு அணிகளும் தங்களுக்கான புதிய பெயர்களைத் தேர்வு செய்யவும், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சுயேட்சை சின்னங்களின் பட்டியலில் இருந்து புதிய சின்னங்களைத் தேர்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இரு தரப்பும் தலா 3 பெயர்கள் மற்றும் 3 சின்னங்களை முன்னுரிமை அடிப்படையில் செப்டம்பர் 18ஆம் தேதி காலை 11 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க: விநாயகர் சிலை கரைக்கும்போது விபரீதம்.. நீரில் மூழ்கி பலியான 6 மாணவர்கள்!

இரண்டாக பிரிந்த திரிணாமுல் காங்கிரஸ்:

இந்த உத்தரவு தொடர்பாக தேர்தல் ஆணையம் இரு தரப்பினரையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது. மம்தா அணியின் சார்பில் பேசிய எம்.பி. கல்யாண் பானர்ஜி, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் என தங்கள் தரப்பு வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு, 2026 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தீவிரமடைந்தது. இரு தரப்பினரும் கட்சியின் அமைப்பு, நிர்வாகிகள் மற்றும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமை தொடர்பாக மாறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமின்றி, கடந்த காலங்களில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) ஆகியவற்றில் ஏற்பட்ட பிளவுகளின்போதும், சர்ச்சை தீரும் வரை கட்சியின் பெயர் மற்றும் தேர்தல் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us