AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விநாயகர் சிலை கரைக்கும்போது விபரீதம்.. நீரில் மூழ்கி பலியான 6 மாணவர்கள்!

6 Students Died By Drowning In Water | தெலங்கானாவில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற மாணவர்கள் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கிய நிலையில், பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுது மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகர் சிலை கரைக்கும்போது விபரீதம்.. நீரில் மூழ்கி பலியான 6 மாணவர்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Sep 2026 23:44 PM IST

ஐதராபாத், செப்டம்பர் 17 : தெலங்கானாவில் (Telangana) விநாயகர் சிலை கரைக்கும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டுச் சென்று, நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமாக உள்ள நிலையில், இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், விநாயகர் சிலை கறைப்பின்போது மாணவர்கள் பலியானது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விநாயகர் சிலை கரைப்பின் போது ஏற்பட்ட சோக சம்பவம்

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டம், படான்செரு பகுதியில் உள்ள ஷிரீஷா அறக்கட்டளையில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 16, 2026) அறக்கட்டளையில் வழிபட்டு வந்த விநாயகர் சிலையை கரைப்பதற்காக 8 மாணவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். மாலை நேரத்தில் அந்த இடத்தில் வெளிச்சல் இல்லாததன் காரணத்தாலும், ஆழமான பகுதியில் மாணவர்கள் சிக்கிக்கொண்டதாலும் மாணவர்கள் வெளியே வர முடியாமல் தவித்துள்ளனர்.

இதையும் படிங்க : இந்திய போர்க்கப்பலுடன் பாகிஸ்தான் கடற்படை கப்பல் மோதல்: தூதரக அதிகாரிக்கு சம்மன்!

நீரில் மூழ்கி பலியான 6 மாணவர்கள்

இதில் 21 வயதான நரசிம்மா, 17 வயதான தேஜா, 17 வயதான சித்தார்த்தா, 18 வயதான கணேஷ், 17 வயதான சுமந்த் ரெட்டி மற்றும் 22 வயதான உதய் கிரண் ஆகியோர் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களின் உடல்களை மீட்டுள்ளனர்.

இதையும் படிங்க : ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசம்.. மத்திய அரசு அறிவிப்பு!

இந்த நிலையில்,  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us