AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரீல்ஸ் எடுக்க முயன்றபோது விபரீதம்.. 13வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இளம் பெண்!

Young Woman Falls to Death While Filming Reels | பெங்களூரில் நண்பர்களுடன் ரீல்ஸ் எடுக்க சென்ற இளம் பெண் 13வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிலேஷன்ஷிப் விவகாரத்தில் சோக ரீல்ஸ் எடுக்க சென்ற நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

ரீல்ஸ் எடுக்க முயன்றபோது விபரீதம்.. 13வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இளம் பெண்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Jun 2025 11:25 AM IST

பெங்களூரு, ஜூன் 27 : பெங்களூரில் (Bengaluru) 13வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளம், உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுத்துக்கொண்டு இருந்த போது தவறி விழுந்த நிலையில், அந்த பெண்ணுக்கு இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், இளம் பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ரீல்ஸ் மோகம் காரணமாக நிகழும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரீல்ஸ் எடுக்க சென்ற இளம் பெண் 13வது மாடியில் இருந்து தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளது.

ரீல்ஸ் எடுக்க முயன்றபோது விபரீதம் – 13வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளம் பெண்

பெங்களூரில், பரப்பன அக்ரஹாரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் 20 வயதான இளம் பெண். அவர் தனது நண்பர்களுடன் பார்டி செய்துக்கொண்டு இருந்த நிலையில், ரீல்ஸ் எடுப்பதற்காக அவர்களை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். முன்னதக அவர்களுக்குள் ஏதோ ரிலேஷன்ஷிப் குறித்த வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சோக ரீல்ஸ் எடுப்பதற்காக அந்த பெண் தனது நண்பர்களுடன் சென்ற நிலையில், தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள போலீசார், அவர்கள் தங்களது வீட்டில் பார்டி செய்துக்கொண்டு இருந்தனர். பின்னர் ரீல்ஸ் எடுப்பதற்காக மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர். அப்போது தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் ரிலேஷன்ஷிப் சிக்கல்கள் ஏதுவும் உள்ளதா என தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் உண்மை என்ன என்பது குறித்து தெரிய வரும் என்று கூறியுள்ளனர்.

மாடியில் இருந்து தவறி விழுந்த அந்த இளம் பெண் பீகாரை சேர்ந்தவர் என்றும், பெங்களூரில் ஒரு வணிக வளாகத்தில் பணியாற்றி வந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். இந்த நிலையில், ரீல்ஸ் எடுக்க மொட்டை மாடிக்கு சென்ற இளம் பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us