AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“பாய்ந்த தோட்டாக்கள்.. சிதறிய உடல்கள்” AK-47 துப்பாக்கியுடன் வீரர் வெறிச்செயல்.. ஜம்முவில் 4 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பரிதாப பலி!

Jammu & Kashmir 4 CISF Personnel Killed : ஜம்மு காஷ்மீரில் சிஐஎஸ்எஃப் வீரர் துப்பாக்கியால் சுட்டதில் உயர் அதிகாரி உள்பட 4 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய வீரரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

“பாய்ந்த தோட்டாக்கள்.. சிதறிய உடல்கள்” AK-47 துப்பாக்கியுடன் வீரர் வெறிச்செயல்.. ஜம்முவில் 4 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பரிதாப பலி!
சுட்டுக் கொல்லப்பட்ட 4 சிஐஎஸ்எஃப் வீரர்கள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 30 Sep 2026 08:45 AM IST

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் சி. ஐ. எஸ் .எப். வீரர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் ஏகே 47 துப்பாக்கியால் கண் மூடித் தனமாக சுட்டதில் அதிகாரி உள்பட 4 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சோலையில் உள்ள மஸ்கா கிராமத்தில் சேவா மின் திட்டத்தில் சி. ஐ. எஸ். எஃப் வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு, பணியில் இருந்த சில வீரர்கள் மத்தியில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஒரு வீரர் பாதுகாப்பு பணிக்காக தனது கையில் வைத்திருந்த ஏகே-47 துப்பாக்கியால் சக வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில், ஒரு அதிகாரி உட்பட நான்கு வீரர்கள் சம்பவ இடத்திலேயே துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் சி. ஐ. எஸ். எஃப். உதவி தளபதி அஜித் குமார் பாண்டே, உதவி ஆய்வாளர் லட்சுமண் சிங், தலைமை காவலர்கள் ரபிக் அகமது சந்திப் குமார் என்பது தெரியவந்துள்ளது.

150 தோட்டாக்கள் வைத்திருந்த தலைமை காவலர்

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சி. ஐ. எஸ். எஃப். தலைமை காவலர் அவ்தேஸ் குமார் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்து தனக்கு வழங்கப்பட்ட ஏகே 47 ரக துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டு உள்ளார். இதில் சுமார் 150 தோட்டாக்களை அவர் வைத்திருந்ததாக சிஐஎஸ்எப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த ஏகே 47 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த 4 வீரர்களின் உடல்களும் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள என்.ஹெச்.பி.சி. அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : கேரளத்தில் வியாபாரியை கத்தியால் குத்திய தமிழக நபர்.. லாட்டரியில் பரிசு விழாத ஆத்திரத்தில் வெறிச்செயல்!

துப்பாக்கிச் சூடு நடத்திய வீரர் கைது

இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்திய தலைமை காவலர் அவ்தேஷ் குமார் சிங்கை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தை அமைப்பதற்கு சி. ஐ. எஸ். எஃப்., தலைமை உத்தரவிட்டுள்ளது. வீரர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் குறித்த காரணம் தற்போது வரை தெரிய வரவில்லை.

துணை ராணுவ படையினர் மத்தியில் பரபரப்பு

இருந்தாலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாக சிஐஎஸ்எப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் துணை ராணுவ படையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேவா- 2 நீர்மின் திட்டம் இமாச்சலப் பிரதேசம் எல்லை அருகே உள்ள கருவா மாவட்டத்தின் மஸ்கா என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி இமாச்சல் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: விஜய் நடித்த ‘லியோ’ கஃபே.. ஜம்மு காஷ்மீரில் இப்போ இதுதான் டிரெண்டிங்.. குவிந்து வரும் ரசிகர்கள்!

Follow Us