AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

30 கிலோ மீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி.. 12 மணி நேரத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு!

Odisha Woman Swept 30km Down River | ஒடிசாவில் ஆற்றுக்கு சென்ற மூதாட்டி ஒருவர், ஆற்றில் தவறி விழுந்த நிலையில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் 12 மணி நேரத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

30 கிலோ மீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி.. 12 மணி நேரத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு!
பாதிக்கப்பட்ட மூதாட்டி
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Sep 2026 22:58 PM IST

கேந்திரபாரா, செப்டம்பர் 29 : ஒடிசாவில் (Odisha) ஆற்றில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி, எந்தவித ஆபத்தும் இல்லாமல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். சுமார் 12 மணி நேரம் மூதாட்டி தண்ணீரில் சிக்கி தவித்த நிலையில்,  இரண்டு இளைஞர்கள் அவரை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

30 கிலோ மீட்டர் தூரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி

ஒடிசா மாநிலம், கேந்திரபாரா மாவட்டம், கலாகண்ட் பகுதியை சேர்ந்தவர் கெசி தலாய் என்ற மூதாட்டி. இவர் செப்டம்பர் 27, 2026 அன்று அருகில் உள்ள பிராமணி ஆற்றுக்கு சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய மூதாட்டி, சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில், சுமார் 12 மணி நேரம் அவர் தண்ணீரில் உயிருக்காக போராடிக்கொண்டு இருந்துள்ளார்.

இதையும் படிங்க : சர்ஜிக்கல் ஸ்டிரைக்ஸ் ஒரு வரலாற்று சாதனை.. மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய விஷயங்கள்!

மூதாட்டியை காப்பாற்றிய இரண்டு இளைஞர்கள்

மூதாட்டி தண்ணீரில் தத்தளித்துக்கொண்டு இருந்த நிலையில், அந்த வழியாக இரண்டு இளைஞர்கள் படகில் சென்றுள்ளனர். அப்போது மூதாட்டியை கண்ட அவர்கள், அவரை மீட்டு உடனடியாக அவருக்கு முதல் உதவி சிகிச்சை வழங்கியுள்ளனர். இந்த நிலையில் தற்போது மூதாட்டி நலமுடன் உள்ளார். இது குறித்து பேசிய அவர், நான் ஆற்றுக்கு சென்றேன். அங்கே நிலம் வழுக்கும் என தெரியாது. கால் இடறி ஆற்றுக்குள் விழுந்தேன். உடனே நான் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டேன்.

இதையும் படிங்க : கிராமத்தை ஆள்வது யார்? உண்மையான முடிவுகள் எப்படி எடுக்கப்படுகின்றன?

இரவு முதல் காலை வரை ஆற்றில் மிதந்த மூதாட்டி

இரவு 10 மணிக்கு ஆற்றில் விழுந்த நான் காலை 10 மணி வரை ஆற்றில் மிதந்துக்கொண்டு இருந்தேன். அப்போது இருவர் படகில் சென்றுக்கொண்டு இருந்தேன். அவர்களை பார்த்து நான் கை அசைத்தேன். அவர்கள் எனது அருகில் வந்து என்னை படகில் ஏற்றிக்கொண்டனர். அவர்கள் எனக்கு அணிய உடை கொடுத்தனர். அவர்கள் எனது கை, கால்களை தேய்த்து என்னை வெப்பமாக்கினர். பிறகு அவர்கள் என்னை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸை அழைத்தனர் என்று கூறியுள்ளார்.

முதலைகள் நிறைந்த அந்த ஆற்றில் மூதாட்டி உயிர் பிழைத்தது அசாத்தியமானது என்று அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Follow Us