AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டீயுடன் இந்த உணவுகளை சாப்பிடுகிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!

Avoid These with Tea : தேநீரில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், சரியான உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ளப்படாவிட்டால் அது உடலுக்கு நிறைய தீங்கு விளைவிக்கும். எனவே இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை தேநீருடன் சேர்த்து உட்கொள்ளாமல் பாதுகாப்பான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவது நல்லது.

டீயுடன் இந்த உணவுகளை சாப்பிடுகிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Jun 2025 23:27 PM IST

காலையில் எழுந்ததும் ஒரு டீ (Tea), மாலையில் இன்னொரு கப் டீ, மழை பெய்யும்போது டீ, நண்பர்களைச் சந்திக்கும்போது டீ என நம் அன்றாட வாழ்வில் டீக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. டீ என்பது பலரின் விருப்பமான பானமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் அது அறிவிக்கப்படாத தேசிய உணவு. அந்த அளவுக்கு மக்கள் டீக்கு அடிமையாக இருக்கிறார்கள்.  பலர் காலை  முதல் மாலை வரை எண்ணற்ற முறை தேநீர் அருந்துகிறார்கள். அவர்களுக்கு டீ குடித்தால் தான் அடுத்த வேலையே நடக்கும். இருப்பினும், டீயுடன் சில உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு பல பிரச்னைகளை ஏற்படுத்தும். குறிப்பாக பலருக்கு அல்சர் (Ulcer) துவங்கி மோசமான விளைவுகள் வரை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தக் கட்டுரையில், தேநீருடன் சேர்த்து எடுத்துக்கொள்ளக்கூடாத சில உணவுகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்

பச்சை காய்கறிகள் குறிப்பாக பீன்ஸ் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை  டீயுடன் சேர்த்து உட்கொள்ளக்கூடாது. தேநீரில் உள்ள டானின்கள் எனப்படும் வேதிப்பொருட்கள் உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கின்றன. இது இரத்த சோகை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

பால் பொருட்கள்

நம்மில் பெரும்பாலானோர் டீயை பாலில் கலந்து தான் குடிப்போம். ஆனால், தேநீரில் உள்ள ஆக்ஸாலிக் அமிலம் (Oxalic acid), பாலில் உள்ள கால்சியத்துடன் இணைந்து கால்சியம் ஆக்சலேட்டை உருவாக்குகிறது. இது சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கிறது.

கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகள்

சப்பாத்தி, இட்லி, தோசை போன்ற கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளை தேநீருடன் சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்கச் செய்யும். தேநீரில் உள்ள காஃபின் இன்சுலின் செயல்பாட்டை பாதிக்கிறது. எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஆபத்தானது.

கால்சியம் அதிகம் உள்ள உணவுகள்

மீன், பருப்பு வகைகள் மற்றும் பிற கால்சியம் நிறைந்த உணவுகளை டீயுடன் சாப்பிடுவது உடலில் கால்சியம் உறிஞ்சுதலைக் குறைக்கும். இதனால் எலும்பு வலிமை குறைந்து ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

காரமான மற்றும் புளிப்பான உணவுகள்

டீயுடன் காரமான அல்லது புளிப்பான உணவுகளை சாப்பிடுவது வயிற்று அமிலத்தன்மையை அதிகரிக்கும். இது காலப்போக்கில் வயிற்றுப் புண்கள் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

மருந்துகள்

சிலர் தங்கள் மருந்துகளை தேநீருடன் எடுத்துக்கொள்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. தேநீரில் உள்ள காஃபின் மற்றும் டானின்கள் மருந்துகளின் செயல்திறனைக் குறைக்கலாம் அல்லது மருந்துகளின் பக்க விளைவுகளை அதிகரிக்கலாம். எனவே, தேநீர் குடித்த உடனேயே மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாதீர்கள்.

Follow Us