Summer Health: கோடையில் நீங்கள் நிறைய சிக்கன் சாப்பிடுகிறீர்களா..? இந்த உடல்நல பிரச்சனைகள் உண்டாக்கும்!
Summer Heat and Chicken: கோடை கால வெப்பம் உடல்நலத்தை பாதிக்கலாம். சிக்கன் சாப்பிடுவது உடல் வெப்பத்தை அதிகரித்து தலைவலி, கண் எரிச்சல், நீரிழப்பு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். ஆனால், சிக்கனில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 உள்ளது. வாரத்திற்கு ஒரு முறை மிதமாக உட்கொள்ளலாம். சிக்கன் சரியாக சமைத்து, சுத்தமாக கழுவிய பின் சாப்பிடுவது அவசியம்.

இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் கோடை காலம் (Summer) என்பதால் அதிக வெப்பநிலை நிலவி வருகிறது. இந்த மாறிவரும் வானிலை காரணமாக, மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படலாம். எனவே, குளிர்காலத்தை விட கோடை காலத்தில் ஒருவர் குறைவாகவும், விரைவில் செரிமானம் ஆகக்கூடிய உணவை எடுத்து கொள்வது நல்லது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதன்படி, லேசான உணவுகளுடன் வெள்ளரி, தர்ப்பூசணி (Watermelon) போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். அதேநேரத்தில், கோடையில் அதிகமாக சிக்கன் (Chicken) சாப்பிடுவது நல்லதல்ல, இது உடல் வெப்பநிலையை இன்னும் அதிகரிக்கும். அந்தவகையில், கோடை காலத்தில் அதிகமாக சிக்கன் சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் உண்டாக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
தவிர்ப்பது நல்லது:
கோடை காலத்தில் எவ்வளவு தூரன் சிக்கனை தூரமாக தள்ளி வைக்கிறீர்களே, அவ்வளவு நல்லது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கோடையில் சிக்கன் சாப்பிடுவது உங்கள் உடல் வெப்பநிலையை இன்னும் அதிகரிக்கும். உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பம் கடுமையான தலைவலி, கண் எரிச்சல், கட்டுபாடற்ற இரத்த அழுத்தம், தசை வலி, நீரிழப்பு மற்றும் அதிகப்படியான வியர்வை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
நீங்கள் சிக்கன் பிரியராக இருந்தால், வாரத்திற்கு ஒரு முறை சிக்கன் சாப்பிடலாம். அதேநேரத்தில், வாரத்திற்கு 2 அல்லது 3 முறை சாப்பிடும்போது இரவு நேரத்தில் உங்களுக்கு நீர் கடுப்பை உண்டாக்கலாம். அதேநேரத்தில் எடை அதிகரிக்க செய்வதோடு, அஜீரண பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சிக்கனில் பொதுவாக சால்மோனெல்லா மற்றும் கேம்பிலோபாக்டர் போன்ற பாக்டீரியாக்கள் உள்ளன. எனவே, சமைப்பதற்கு முன்பு அதை சுத்தமாக கழுவி, நன்கு சமைத்த பின்னரே சாப்பிட வேண்டும். இல்லையெனில், இந்த பாக்டீயாக்கள் உடலுக்குள் நுழைந்து பல உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
சிக்கனில் உள்ள நன்மைகள்:
சிக்கனில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது தசை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. சிக்கன் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் தரும். இருப்பினும், கோடைக்காலம் மட்டுமின்றி அனைத்து பருவ காலங்களிலும் தினமும் சிக்கன் உட்கொள்வது, எவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்தாலும், பல்வேறு உடல்நல பிரச்சனைகளை தரலாம்.
ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்பவர்களின் டயட் பட்டியலில் சிக்கன் உள்ளது. இதனால் அதிகப்படியான புரதம் உடலில் குவிந்து கொழுப்பாக மாறுகிறது. இது உங்களை அறியாமலேயே உங்கள் எடையே அதிகரிக்கும். எனவே, கோடை காலத்தில் ஜிம் செல்வபவராக இருந்தால் தினமும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிடுவது நல்லது.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)