Vijay Sethupathi: எனது வாழ்நாளிலே அப்படியொரு காட்சியில் நடிப்பேன்னு நினைக்கல- விஜய் சேதுபதி ஓபன் டாக்!

Vijay Sethupathi About Kaathuvaakula Rendu Kaadhal Movie: நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்துவருகிறார். இவர் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், அதில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

Vijay Sethupathi: எனது வாழ்நாளிலே அப்படியொரு காட்சியில் நடிப்பேன்னு நினைக்கல- விஜய் சேதுபதி ஓபன் டாக்!

சமந்தா, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா

Published: 

20 Feb 2026 08:31 AM

 IST

கோலிவுட் சினிமாவில் பிரபல கதாநாயகனாக இருப்பவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து படங்கள் வெளியாகிவரும் நிலையில், தற்போது தெலுங்கு சினிமாவிலும் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். ஏற்கனவே உப்பென என்ற தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்த நிலையில், ஸ்லம்டாக் (Slumdog) என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் தயாராகிவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் நடிப்பில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களும் தயாராகிவருகிறது. இவரின் நடிப்பில் ஆண்டிற்கு 2 முதல் 3 படங்கள் வரை வெளியாகிவிடுவது தெரிந்ததே. அவ்விதத்தில் இந்த 2026ம் ஆண்டில் முதல் படமாக காந்தி டால்க்ஸ் (Gandhi Talks) என்ற படமானது வெளியானது.

மௌன படமாக தயாராகியுள்ள இது, 2026 ஜனவரி மாதத்தின் இறுதியில் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த விஜய் சேதுபதி, காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: தளபதி விஜய் மீது எனக்கு அளவற்ற அன்பு இருக்கிறது – சாய் அபயங்கர்

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்த அனுபவம் குறித்து விஜய் சேதுபதி பேச்சு :

அந்த நேர்காணலில் பேசிய விஜய் சேதுபதி, “எனது வாழ்நாளிலே, அந்த ரெண்டு பெரிய ஹீரோயினோடு இணைந்து நடிப்பேன்னு நினைத்துக்கூட பார்க்கவில்லை. வாழ்றாண்டா-னு சொல்லுவாங்கல அந்த மாதிரி இருந்தது. மேலும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில், பஸ்ஸில் படியில் தொங்கிக்கொண்டு ஒரு காட்சி வருமே அதை பண்ணும்போது தெரியும், நான் என்ன கஸ்டப்பட்டேனு. அந்த படத்தில் நான் நடிப்பதை பார்க்கும்போதுதானே ஜாலியா தெரியாது.

இதையும் படிங்க: சர்வம் மாயா படத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்த சூர்யா – ஜோதிகா தம்பதி… உற்சாகத்தில் படக்குழு!

அந்த பஸ் காட்சியில், சமந்தா மற்றும் நயன்தாரா நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பின் ஒரு சின்ன இடத்தில்தான் நான் நின்றுகொண்டுஇருந்தேன். விக்னேஷ் சிவன் சொன்னதும், அவர்களுக்கு பின்னல் இருந்து எட்டிப்பார்க்கவேண்டும். அந்த காட்சியில் நடிக்கும்போது கஷ்டமாக இருந்துச்சி” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

தனது புது திரைப்படம் குறித்து விஜய் சேதுபதி வெளியிட்ட பதிவு :

நடிகர் விஜய் சேதுபதி, தற்போது இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் பாக்கெட் நாவல் என்ற படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது இந்த 2026ம் ஆண்டும் இறுதிக்குள் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களில் Emergency Quota .. எத்தனை சீட்கள் ஒதுக்கப்படும்?
மணமகளின் பையை திருடிச் சென்ற நபர்.. ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி கொள்ளை..
சந்தேகத்தின் பெயரில் காதலியை கொலைசெய்த காதலன்
ஏப்.30 வரை "ஜனநாயகன்" வெளியாக வாய்ப்பில்லை - ரசிகர்கள் அதிர்ச்சி!