Suriya : தனுஷ் பட இயக்குநருடன் இணைகிறாரா சூர்யா? உண்மை என்ன?
Suriya New Movie Update: நடிகர் சூர்யா தற்போது தெலுங்கில் இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா46 படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து அவர் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ஒருவரின் படத்தை இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது. அது யார் என்பதைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தமிழில் இறுதியாக ரெட்ரோ (Retro) படமானது வெளியானது. கடந்த 2025, மே 1ம் தேதியில் வெளியான இப்படமானது ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்று, சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படம் சுமார் ரூ.230 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை புடைத்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் கருப்பு (Karuppu), அதாவது சூர்யா45 படத்தில் இனைந்தார். இப்படத்தின் ஷூட்டிங்கும் முழுமையாக நிறைவடைந்த நிலையில், அதைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் சூர்யா46 (Suriya ) படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 ம் ஆண்டு மே மாத இறுதியில் தொடங்கியிருந்தது.
அதைத் தொடர்ந்து ஷூட்டிங் விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து, சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் சூர்யா இணையவுள்ளார் என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த இயக்குநர் வேறு யாருமில்லை லோகேஷ் கனகராஜை வைத்து படம் இயக்கப்போவதாகக் கூறப்பட்ட, இயக்குநர் அருண் மாதேஷ்வரன்தான் (Arun Matheswaran). இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இதைப் பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படம் தொடர்பான பதிவு :
View this post on Instagram
கேப்டன் மில்லர் திரைப்படம் :
இயக்கினர் அருண் மாதேஸ்வரன் கடந்த 2024ம் ஆண்டு வெளியான கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் பிரியங்கா மோகன் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜை வைத்து ஹீரோவாக புதிய படத்தை எடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவந்தது. இப்படத்தைத் தொடர்ந்து சூர்யாவுடன் புதிய படத்தில் இணையவுள்ளார் என்று கூறப்படுகிறது.
இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பதாகக் கூறப்படும் நிலையில், அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. ஒருவேளை இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படத்தைத்தான் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பதாகவும் கூறப்படும் நிலையில் ரசிகர்களிடையே குழப்பம் நீடித்து வருகிறது. சூர்யாவுடன் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இணைவதாகக் கூறப்படும் நிலையில், அதை பற்றி எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் புதிய படங்கள் :
நடிகர் சூர்யா கருப்பு படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து, இயக்குநர் வெங்கி அட்லூரியின் சூர்யா46 படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025, மே மாதத்தில் தொடங்கியது. இதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து வருகிறார்.
இப்படத்தை அடுத்ததாக சூர்யா இயக்குநர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணைவதாகக் கூறப்படுகிறது. இப்படம் கைவிடப்பட்டதாகக் சொல்லப்படும் நிலையில், அதைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.