Rajinikanth: ஜன நாயகன் பட லீக் அதிர்ச்சியை அளிக்கிறது… அரசு கடுமையான தண்டனை அளிக்கவேண்டும் – ரஜினிகாந்த் கண்டனம்!

Rajinikanth Condemns Jana Nayagan Movie Leak: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை அளித்திருந்த நிலையில், தற்போது இந்த தவறான வேலையை செய்தவருக்கு தக்க தண்டனையை அரசு வழங்கவேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Rajinikanth: ஜன நாயகன் பட லீக் அதிர்ச்சியை அளிக்கிறது... அரசு கடுமையான தண்டனை அளிக்கவேண்டும் - ரஜினிகாந்த் கண்டனம்!

ஜன நாயகன் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Updated On: 

10 Apr 2026 21:28 PM

 IST

கோலிவுட் சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து கலக்கிவருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் தொடர்ந்து சினிமாவில் படங்களில் நடித்துவரும் நிலையில், தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்யும் நாயகனாக தற்போதுவரையிலும் இருந்துவருகிறார். இவர் தற்போது ஜெயிலர் 2 (Jailer 2) படத்தின் ஷூட்டிங்கில் பிடியாக இருக்கும் நிலையில், இதையடுத்து தலைவர் 173 என்ற படத்தில் கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியாக தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) ஜன நாயகன் (Jana Nayagan) படமானது முழுவதுமாக லீக் ஆகியுள்ளது. அந்த வகையில் இப்படத்திற்கு ஆதரவாகவும், இணையத்தில் லீக் செய்தவர்களுக்கு தக்க தண்டனையை வழங்கவேண்டும் என பல நடிகர்களும் தங்களின் ஆதரவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுவருகின்றனர்.

அந்த வகையில் தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி இதை கண்டித்து பதிவை வெளியிட்டிருந்த நிலையில், தமிழில் எந்த மூத்த நடிகர்களும் இவ்வாறு ஆதரவு பதிவை வெளியிடவில்லை என ரசிகர்கள் பேசப்பட்டுவந்தது. அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜன நாயகன் படத்திற்கு ஆதரவாக தனது எக்ஸ் பக்கத்தில் கண்டன பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இதெல்லாம் நியாயமே இல்லை… தளபதி விஜய்காக குரல் கொடுத்த சூர்யா!

ஜன நாயகன் திரைப்பட இணையத்தில் கசிந்ததை கண்டித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

அந்த பதிவில் நடிகர் ரஜினிகாந்த், “ஜன நாயகன் படமானது யாராலோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது, அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்குகிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இந்த செயலை செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் . மேலும் இதுபோன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இந்த பதிவானது இணையத்தில் வைரலாகிவருகிறது. ஜன நாயகன் படத்தின் காட்சிகள் லீக் ஆகி, கிட்டத்தட்ட ஒரு நாளான நிலையில், இப்போதுதான் பல நடிகர்கள் ஆதரவாக பேசிவருவதாக இணையத்தில் ரசிகர்கள் கொந்தளித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: அவன் போட்ட ரூல்ஸை அவனே பிரேக் பண்ணிட்டு வந்திருக்கான்னா… ஒரு ஆண்டை நிறைவு செய்தது குட் பேட் அக்லி படம்!

தளபதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்திற்கு ஆதரவாக சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஜி.வி.பிரகாஷ், சாந்தனு, சிபி சத்யராஜ், கார்த்தி, குஷ்பு என பல்வேறு பிரபலங்கள் குரல் கொடுத்திருந்தனர். மேலும் திரைப்பட சங்கமும் இதற்க்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், இன்னும் ஜன நாயகன் படத்தின் காட்சிகள் இணையத்திலிருந்து அகற்றப்படவில்லை. இதற்கு எதிராக படக்குழு எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையிலும், இப்படத்தின் நிலை குறித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?