Sai Abhyankkar: சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் 3வது பாடல் ரிலீஸ் எப்போது? – தேதியை அறிவித்த சாய் அபயங்கர்!
Karuppu 3rd Song Release: நடிகர் சூர்யா மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் கூட்டணியில் மிகவும் சிறப்பாக தயாராகிவரும் படம்தான் கருப்பு. இப்படத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் 3வது பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

கருப்பு படம் குறித்து சாய் அபயங்கர்
கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவர் ஆக்ஷன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்க, ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் எஸ்.ஆர்.பிரபு (RS Prabhu) தயாரித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் ஆக்ஷன் மற்றும் பொழுதுபோக்கு கதைக்களத்தில் அமைந்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்திருப்பதாகவும், அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷாவும் (Trisha) வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் மாஸ் காட்சிகளுடன் அமைந்துள்ளதாம் . அந்த வகையில் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ள நிலையில், இப்படத்திலிருந்து காட் மோட் (God Mode) மற்றும் நாங்க நாலு பேரு (Naanga Naalu Peru) என இரு பாடல்கள் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இப்படத்தின் 3வது பாடல் எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுவந்தது. அந்த வகையில் இப்படத்தின் 3வது பாடல் வரும் 2026 ஏப்ரல் 14ம் தேதியில், தமிழ் புத்தாண்டை (2026 Tamil New Year) முன்னிட்டு வெளியாகும் என சாய் அபயங்கர் அறிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருமணம் கொண்டாட்டம் முடிந்து ஷூட்டிங் வந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
கருப்பு திரைப்படத்தின் 3வது பாடல் ரிலீஸ் தேதி குறித்து சாய் அபயங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Karuppu 3rd single from 14th April
— abhyankkar (@SaiAbhyankkar) April 11, 2026
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் கருப்பு திரைப்படத்தின் 3வது பாடல் வரும் 2026 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்படுவதாக தெரிவித்திருந்தார். அந்த வகையில் இது குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகபரவி வருகிறது.
இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தின் லீக் – தணிக்கை வாரியம் விளக்கம்
சூர்யாவின் இந்த கருப்பு திரைப்படத்தில் நடிகர்கள் திரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, யோகி பாபு, இந்திரன்ஸ், நட்டி சுப்ரமணியம், அனகா மாயா ரவி, சப்ரீத் ரெட்டி, மன்சூ அலிகான் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது கருப்ப சாமி மற்றும் நீதியை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் சூர்யா பல ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படமானது வரும் 2026 ஆண்டு மே 14ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில் இன்னும் இப்படத்தின் வெளியீட்டிற்கு ஒரு மாதம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.