AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

RCB vs GT IPL 2026 Final highlights : விராட் கோலியின் ஒன்மேன் ஷோ.. குஜராத்தை வீழ்த்தி 2வது முறையாக டைட்டில் அடித்த ஆர்சிபி

Royal Challengers Bengaluru vs Gujarat Titans IPL 2026 Final Highlights : ஐபிஎல் 2026 இறுதிப் போட்டி மே 31 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டியில், தொடர்ந்து ரன்களைக் குவித்து வரும் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோர் மீதே அனைவரின் கவனமும் இருக்கும்.

C Murugadoss
C Murugadoss | Updated On: 31 May 2026 23:36 PM IST
Share
RCB  vs GT  IPL 2026 Final highlights : விராட் கோலியின் ஒன்மேன் ஷோ.. குஜராத்தை வீழ்த்தி 2வது முறையாக டைட்டில் அடித்த ஆர்சிபி
2வது முறையாக டைட்டில் அடித்த ஆர்சிபி

IPL 2026 Final : ஐபிஎல் 2026 இறுதிப் போட்டி ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது. மே 31 ஆம் தேதி மாலை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி, கோப்பையை வெல்வதற்கான ஒரு கடுமையான போட்டியாக சந்தேகமின்றி இருக்கும். இருப்பினும், குஜராத் தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோருக்கு பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வானின் உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பும் உள்ளது. ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில், ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் ஜோடியானது பாபர் மற்றும் ரிஸ்வானை முறியடிப்பது மட்டுமல்லாமல், 10 ஆண்டுகளுக்கு முன்பு விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் அமைத்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. இன்றைய ஐபிஎல் போட்டி தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் பார்க்கலாம்

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 31 May 2026 11:27 PM (IST)

    விராட் கோலியின் ஒன்மேன் ஷோ – 2வது முறையாக டைட்டில் அடித்த ஆர்சிபி

    விராட் கோலியின் அபார ஆட்டத்தால் குஜராத்தை  5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது முறையாக கோப்பையை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

  • 31 May 2026 10:50 PM (IST)

    RCB vs GT IPL Final Updates: விராட் கோலி அரைசதம்.. 113 ரன்களை தொட்ட பெங்களூரு!

    ஐபிஎல் 2026 சீசனின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 156 ரன்களை துரத்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 11 ஓவர்களில் 109 ரன்கள் எடுத்துள்ளது.

  • 31 May 2026 10:14 PM (IST)

    RCB vs GT LIVE Updates: 5 ஓவர்கள் முடிவில் 63 ரன்கள்.. இலக்கை நோக்கி பெங்களூரு..!

    குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்துள்ளது.

  • 31 May 2026 09:23 PM (IST)

    RCB vs GT LIVE Updates: 155 ரன்கள் மட்டுமே எடுத்த குஜராத்.. கோப்பையை தூக்குமா பெங்களூரு?

    முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனடிப்படையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பேட்டிங்கில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இருப்பினும், வாஷிங்டன் சுந்தர் போராடி 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

  • 31 May 2026 08:54 PM (IST)

    RCB vs GT LIVE Updates: அடுத்தடுத்து வீழும் விக்கெட்டுகள்.. ரன் எடுக்க தடுமாறும் குஜராத்!

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான பைனலில் குஜராத் டைட்டன்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்துள்ளது.

  • 31 May 2026 08:32 PM (IST)

    RCB vs GT LIVE Updates: 12 ஓவர்களில் 72 ரன்கள்.. இன்னும் 100 ரன்களை கடக்காத குஜராத்!

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்துள்ளது.

  • 31 May 2026 07:55 PM (IST)

    RCB vs GT LIVE Updates: அடுத்தடுத்து கில், சுதர்சன் அவுட்.. பைனலில் தடுமாறும் குஜராத் டைட்டன்ஸ் அணி..!

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 சீசனின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய கில் 10 ரன்களிலும், சாய் சுதர்சன் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

  • 31 May 2026 07:39 PM (IST)

    RCB vs GT LIVE Updates: முதல் ஓவரில் 13 ரன்கள்.. ரன் வேட்டையை தொடங்கிய குஜராத்..!

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதல் ஓவர் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்துள்ளது.

  • 31 May 2026 07:17 PM (IST)

    RCB vs GT LIVE Updates: குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளேயிங் லெவன்!

    சாய் சுதர்சன், சுப்மன் கில்(கேப்டன்), ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ராகுல் தெவாடியா, நிஷாந்த் சிந்து, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், அர்ஷத் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ்

  • 31 May 2026 07:16 PM (IST)

    RCB vs GT LIVE Updates: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளேயிங் லெவன்..!

    விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார்(கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், ஜேக்கப் டஃபி, ஜோஷ் ஹேசில்வுட், ரசிக் சலாம் டார்

  • 31 May 2026 07:03 PM (IST)

    RCB vs GT LIVE Updates: டாஸ் வென்ற பெங்களூரு.. முதலில் பேட்டிங் செய்யும் குஜராத்..!

    ஐபிஎல் 2026 சீசனின் இறுதிப்போட்டியில் இன்று அதாவது 2026 மே 31ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் அகமதாபாத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

  • 31 May 2026 06:45 PM (IST)

    RCB vs GT Final: அகமதாபாத் ஸ்டேடியத்திற்கு வர தொடங்கிய ரசிகர்கள்..!

    ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 மே 31ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் அகமதாபாத் ஸ்டேடியத்தில் மோதவுள்ளன. இந்த போட்டியை காண்பதற்கு இரு அணிகளின் ரசிகர்களும் கூட்டம் கூட்டமாக வர தொடங்கினர்.

    அலைமோதும் கூட்டம்:

  • 31 May 2026 06:40 PM (IST)

    அகமதாபாத் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமா?

    அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சொந்த மைதானமாகும். இது சொந்த மைதானம் என்பதால், குஜராத் டைட்டன்ஸுக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஐபிஎல் 2026 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் இந்த ஸ்டேடியத்தில் 7 போட்டிகளில் விளையாடி, அவற்றில் 5ல் வெற்றி பெற்றது. மறுபுறம், இந்த ஸ்டேடியத்தில் ஆர்சிபியின் புள்ளிவிவரங்கள் கலவையாக உள்ளன.

  • 31 May 2026 06:34 PM (IST)

    IPL 2026 Final: ஐபிஎல்லில் வெற்றி பெறும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை..?

    ஐபிஎல்-இன் முதல் பதிப்பில், கோப்பையை வென்றதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ. 4.8 கோடி வழங்கப்பட்டது. இன்று, வெற்றியாளருக்கான பரிசுத் தொகை 5 மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி, ஐபிஎல் 2026 கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி வழங்கப்படும்.

  • 31 May 2026 06:16 PM (IST)

    அகமதாபாத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை

    வானிலை ஆய்வு மையம் அகமதாபாத்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் பொருள், எந்த நேரத்திலும் வானிலை மோசமடையக்கூடும் என்பதற்கான முதல் எச்சரிக்கை இதுவாகும். இருப்பினும், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மழைக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

Published On - May 31,2026 6:00 PM

Follow Us