AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Seyon: சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் இணைந்த மலையாள நடிகர்.. அட இவர்தான்!

Sivakarthikeyans Seyon Movie : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புது புது படங்கள் உருவாகிவருகிறது. இவர் தாய் கிழவி பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் இணைந்து நடித்துவரும் புதிய படம் சேயோன். இதன் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், மலையாள நடிகர் ஒருவர் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வைரலாகிவருகிறது.

Seyon: சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் இணைந்த மலையாள நடிகர்.. அட இவர்தான்!
சேயோன் திரைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 29 Nov 2026 21:01 PM IST

கோலிவுட் மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பை பெற்றுவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய படங்களானது உருவாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் சினிமாவில் வெளியான திரைப்படம் பராசக்தி (Parasakthi Movie). பெண் இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கத்தில் உருவான இப்படம், 2026ம் ஆண்டு ஜனவரி மாத்தியில் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் ஹீரோவாக இணைந்த புதிய திரைப்படம்தான் சேயோன் (Seyon Movie). இதை தாய் கிழவி பட இயக்குநர் சிவக்குமார் முருகேசன் (Director Sivakumar Murugesan) இயக்க, கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமானது உருவாகிவருகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் 3வது கட்ட ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், மலையாள நடிகர் ஒருவர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.

இதையும் படிங்க: சூர்யாவின் சீன் திரைப்படம் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் இணைந்த மலையாள நடிகர்:

சேயோன் திரைப்படமானது முழுக்க முழுக்க மதுரையை மையமாக கொண்ட படமாக அமைக்கப்பட்டுவருகிறது. விருமாண்டி சாமி மற்றும் முருகனின் கதையை அடிப்படையாக கொண்டு இப்படமானது மிக பிரம்மாண்டமாக இயக்கப்பட்டுவருகிறது. இதில் சிவகார்த்திகேயன் அதிரடி வேடத்தில் நடித்துவரும் நிலையில், பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இப்படத்தில் இணைந்து பணியற்றிவருகிறார்கள்.

இதையும் படிங்க: மைசா படத்திற்காக 90 அடியிலிருந்து குதித்தேன் – ராஷ்மிகா மந்தனா!

அந்த விதத்தில் மலையாள சினிமாவில் பிரபல இயக்குநரும், நடிகருமான அல்போன்ஸ் புத்ரன் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அல்போன்ஸ் புத்ரன் சேயோன் பட ஷூட்டிங்கில் இருப்பது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சேயோன் படத்தில் மலையாள நடிகர் இணைந்ததாக வைரலாகும் எக்ஸ் பதிவு:


இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் பிரேமம், நேரம் போன்ற படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் இறுதியாக பல்டி என்ற படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு தற்போது தமிழில் சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், 2027ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us