AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தவெக ஆட்சியில் மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.. முதல்வர் விஜய் குறித்து செல்லூர் ராஜூ தாக்கு!

Sellur Raju Criticizes TVK Govt : தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று எண்ணி வாக்களித்த தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் வெறும் ஏமாற்றமே மக்களுக்கு கிடைத்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடும் விமர்சனம் தெரிவித்து உள்ளார் .

தவெக ஆட்சியில் மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.. முதல்வர் விஜய் குறித்து செல்லூர் ராஜூ தாக்கு!
விஜய் செல்லூர் ராஜூ
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 29 Nov 2026 20:17 PM IST

தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று எண்ணி வாக்களித்த மக்களுக்கு தவெக ஆட்சியில் பெருத்த ஏமாற்றமே கிடைத்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக மதுரை மாவட்டம், கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அதிமுக அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள குதிரை பேரம் நடத்தி சினிமா வசனம் பேசுவது போல் பேசிவிட்டு தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு ஏற்படும் எந்த பிரச்சனையாக இருந்தாலும், சிறை மரணம், பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் எதுவாக இருந்தாலும் குரல் எழுப்பி வருகிறார். தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான துன்பங்கள், துயரங்கள் அதிகரித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள பெண்களுக்கே விஜய் ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தை வதந்தி என்றார் அமைச்சர்

இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்த்து கண்டித்து வரும் ஒரே அரசியல் தலைவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே ஆவார். ஒரு எதிர்க்கட்சியாக கள்ளக்குறிச்சிக்கு சென்று பெண் மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில், தவெக கட்சி நிர்வாகிகளை காப்பாற்றுவதற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் முயற்சித்து வருகிறார். கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம் குறித்து மதுரையில் உள்ள அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரிடம் கேட்டதற்கு, அது தொடர்பான தகவல்கள் வதந்தி என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை மசோதா.. நாடே எதிர்பார்த்த திமுக நிலைப்பாடு.. காங்கிரஸ் கோரிக்கை நிராகரிப்பு!

எந்த பிரச்னைக்கும் முதல்வர் விஜய் குரல் கொடுக்கவில்லை

அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட பெண் ஆட்சியர் புகார் அளிக்கட்டும் என்றும் தெரிவித்திருந்தார். இப்போது, பெண் ஆட்சியர் புகார் அளித்து தவெக எம்எல்ஏ கைதாகியுள்ளார். அப்படியானால், அமைச்சர் நிர்மல் குமார் தனது பதவியை ராஜினாமா செய்வாரா. தமிழகத்தில் நடக்கக்கூடிய எந்த நிகழ்வுக்கும், முதல்வர் விஜய் குரல் கொடுப்பதாக தெரியவில்லை. திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீப தூணில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மேல் ஏற்றினால் அசாதாரண சூழல் ஏற்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினாரோ.

மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு பெருத்த ஏமாற்றம்

அதே மாவட்ட ஆட்சியரையே தீபம் ஏற்ற வேண்டிய சட்டியை தூக்கிக்கொண்டு தீபம் வைத்து விட்டார்கள். தீபம் ஏற்றும் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுத்தது யார் என்கிற கேள்வி எழுகிறது. இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அமைதியான முறையில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. மாற்றம் வேண்டும் என்பதற்காக தவெக அரசை மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால், மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: அப்பாவை காணோம் என்ற அறிவிலிகளே! அப்பாவின் பவர் இப்போது தெரிகிறதா? திவ்யா சத்யராஜ்!

Follow Us