வெற்றிமாறனின் கூட்டணியில் இணையும் கென் – சாய் அபயங்கர் – வெளியான ப்ரோமோ வீடியோ!
Ken X Sai Movie: தமிழ் மக்கள் மத்தியில் தனது இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் மூலமாக மிகவும் பிரபலமானவர் வெற்றிமாறன். இவர் தற்போது தனது பட இயக்கத்தில் பிசியாக உள்ள நிலையில், கென் கருணாஸை வைத்து புது படம் இயக்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இணைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் இயக்குனராக மாபெரும் பிரபலம் பெற்றிருப்பவர் வெற்றிமாறன் (Vetri Maaran). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தற்போது இரு திரைப்படங்கள் ஒரே நேரத்தில் உருவாகிவருகிறது. நடிகர் சிலம்பரசனை (Silambarasan) வைத்து அரசன் (Arasan) என்ற திரைப்படத்தையும், கென் கருணாஸ் (Ken Karunaas) மற்றும் அமீரை வைத்து ராஜன் வகையறா (Rajan Vagaiyara) என்ற படத்தையும் இயக்கிவருகிறாராம். இயக்குநராக இந்த இரு படங்களையும் வெற்றிமாறன் பிரம்மாண்டமாக உருவாக்கிவருகிறார். இந்த படங்கள் இரண்டுமே, தனுஷின் வட சென்னை படத்தின் பின்னணி கதையில் உருவாக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. இதில் ராஜன் வகையறா படத்தில் இளம் ராஜனாக கென் கருணாஸ் நடித்துவரும் நிலையில், இந்த படமானது மிக பிரம்மாண்டமாக உருவாகிவருகிறதாம்.
இந்நிலையில் கென் கருணாஸ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் ராஜன் வகையறா படத்தில் இணைவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைப்பதாக கூறப்படுகிறது. ஆனால், வெற்றிமாறன் தயாரிப்பில் கென் கருணாஸ் மற்றும் சாய் அபயங்கர் இணைவதாக கூறப்படுகிறது.




இதையும் படிங்க: சூர்யா -டிஜே ஞானவேல் கூட்டணி படமான சூர்யா48 ரிலீஸ் எப்போது இருக்கும்? வைரலாகும் தகவல்!!
கென் கருணாஸ் மற்றும் சாய் அபயங்கர் கூட்டணி படம் குறித்து வெளியான ப்ரோமோ பதிவு:
Romantic Hero & Romantic Composer ⭐️ https://t.co/iTIcF4sy2k
— Ken Karunaas (@KenKarunaas) November 29, 2026
தற்போது காமெடி மற்றும் நகைச்சுவையாக தற்போது அறிவிப்பு ப்ரோமோ வெளியாகியுள்ளது. கென் கருணாஸ் மற்றும் சாய் அபயங்கர் கூட்டணியில் இந்த படமானது இணைவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்குகிறாரா? அல்லது வெற்றிமாறனின் தயாரிப்பில் வேறு இயக்குநர் இயக்குகிறாரா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.
கென் கருணாஸ் – சாய் அபயங்கர் கூட்டணி படத்தின் டைட்டில் அப்டேட்:
இயக்குனர் வெற்றிமாறன் அரசன் மற்றும் ராஜன் வகையறா என இரு படத்தில் பணியாற்றிவருகிறார். இதில் ராஜன் வகையறா படத்தில் இளம் ராஜனாக கென் கருணாஸ் நடிக்கிறார். மேலும் இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்திலும், கென் கருணாஸ் புதிய படத்தில் ஹீரோவாக நடிப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: மைசா படத்திற்காக 90 அடியிலிருந்து குதித்தேன் – ராஷ்மிகா மந்தனா!
தற்போது வெளியான ப்ரோமோவில், இந்த படத்தின் டைட்டில் இன்னும் இரு நாட்களில் அதாவது, 2026 டிசம்பர் 1ம் தேதி அல்லது 2ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு பிறகு யார் இயக்குநர் என்பது உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.