அப்பாவை காணோம் என்ற அறிவிலிகளே! அப்பாவின் பவர் இப்போது தெரிகிறதா? திவ்யா சத்யராஜ்!
Divya Sathyaraj Comments M.K. Stalin : தொகுதி மறுவரையறை மசோதோவுக்கு திமுக ஆதரவு தெரிவித்த நிலையில், மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து முடிவை பரிசீலிக்குமாறு இந்தியா கூட்டணி கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில், அப்பாவின் பவர் இப்போது தெரிகிறதா என்று திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மக்களவை தொகுதி மறுவரையறையை மேற்கொள்வதற்கான மசோதாவை மக்களவையில் நாளை திங்கட்கிழமை பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளது. இதற்கு, திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், முடிவை பரிசீலனை செய்யக் கூறி இந்தியா கூட்டணி கட்சியினர் சென்னையில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை சந்தித்திருந்தனர். இந்த நிலையில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது. அதாவது நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பான சட்ட மசோதா விவகாரம் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில், தென் மாநிலங்களின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையக் கூடாது என்ற கோரிக்கை பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் முன் வைக்கப்பட்டு வருகிறது.
மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க வந்திருந்த இந்தியா கூட்டணி கட்சிகள்
இந்த நிலையில், திமுக தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் தங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியின் தலைவர்கள் மசோதா தொடர்பாக முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளவும், தொகுதி மறு வரையறை மசோதா தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில், திவ்ய சத்யராஜ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அப்பாவை காணோம் என்ற அறிவிலிகளே, அப்பாவின் பவர் இப்போது புரிகிறதா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை மசோதா.. நாடே எதிர்பார்த்த திமுக நிலைப்பாடு.. காங்கிரஸ் கோரிக்கை நிராகரிப்பு!
அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்ற கருத்து
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், திவ்யா சத்யராஜின் இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்திலும், சோசியல் மீடியாக்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினை மறைமுகமாக அப்பாவை காணோம் என்று விமர்சனம் செய்திருந்தார். அத்துடன், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் விலகி தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இணைந்தது.
அப்பாவைக் காணோம் என்ற அறிவிலிகளே,
அப்பாவின் பவர் இப்போது புரிந்ததா? 🔥 https://t.co/4jPd8ZzsXY
— Divya Sathyaraj (@DivyaSathyaraj_) November 29, 2026
திமுக ஆதரவை கோரிய இந்தியா கூட்டணி கட்சிகள்
இந்த நிலையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் ஆதரவை கோரி இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் மு. க. ஸ்டாலினை நேரில் சந்திக்க வந்துள்ளனர். இதன் காரணமாக இந்திய அரசியலில் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த நிலையில் தான், திமுக தலைவர் மு. க. ஸ்டாலினின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு திவ்யா சத்யராஜ் சமூக வலைதள பதிவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வாழ்வா சாவா என்ற போராட்டம்! தொகுதி மறுவரையறையை ஆதரித்தது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்!