டிச.1- இல் திருச்சி செல்லும் முதல் அமைச்சர் விஜய்.. அரசு நிகழ்ச்சிகள்- நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பங்கேற்பு!
CM Joseph Vijay Visit Trichy : முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வரும் டிசம்பர் 1- ஆம் தேதி திருச்சி செல்ல இருப்பதாகவும், அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை தொடங்கி வைத்து பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் டிசம்பர் 1- ஆம் தேதி திருச்சி செல்ல இருப்பதாகவும், அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி மாவட்டம், புத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கட்டடத் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை டிசம்பர் 1- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இந்த விழாவை தொடக்கி வைத்து பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் திருச்சி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விழாவில், திருச்சி மாவட்டத்தில் முடிக்கப்பட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை தொடக்கி வைக்கும் முதல்வர், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
டிச.1- ஆம் தேதி திருச்சி செல்லும் முதல்வர் விஜய்
அத்துடன், அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கவும், சாலை வலம் மேற்கொள்ளவும் முதல்வர் விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் காரணமாக, திருச்சி மாவட்டத்தில் டிசம்பர் 1- ஆம் தேதி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் விஜய் பங்கேற்ப இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக சம்பந்தப்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அப்பாவை காணோம் என்ற அறிவிலிகளே! அப்பாவின் பவர் இப்போது தெரிகிறதா? திவ்யா சத்யராஜ்!
முதல்வர் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள்
ஏற்கனவே, கடந்த நவம்பர் 20- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) முதல்வர் விஜய் திருச்சி செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக, திருச்சி மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். ஒரு வாரமாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அதற்கு முந்தைய நாள் முற்பகல் வரை இந்த பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்தப் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்திருந்தனர். முதல்வர் விஜய்யின் இந்த பயணத்தின் போது, திருச்சியில் சாலை வலம் மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
2 முறை திட்டமிட்டு தள்ளி போன முதல்வர் விஜய் பயணம்
ஆனால், திடீரென கொளத்தூர் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ வி. எஸ். பாபு உடல்நலக்குறைவால் திடிரென உயிரிழந்த நிலையில், முதல் அமைச்சர் ஜோசப் விஜயின் திருச்சி பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் நவம்பர் 23- ஆம் தேதி நடைபெறும் எனவும், அதில் முதல்வர் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தவெக கூட்டணி கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மேற்கொண்டதால் இந்த நிகழ்ச்சிகள் டிசம்பர் 1- ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தவெக ஆட்சியில் மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.. முதல்வர் விஜய் குறித்து செல்லூர் ராஜூ தாக்கு!