“நிலநடுக்கம் வருது… தரையிறங்க வேண்டாம்!” – லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பரபரப்பு
Los Angeles Earthquake Scare: லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்குவதற்காக நெருங்கிக்கொண்டிருந்தது. அதே நேரத்தில் விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரி கடுமையான அதிர்வுகளை உணர்ந்தார். உடனே அவர் விமானியைத் தொடர்புகொண்டு, தரையிறங்காமல் மீண்டும் மேலே பறக்கும்படி மீண்டும் மீண்டும் உத்தரவிட்டார்.
அமெரிக்காவின் (America) லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரான டெல்டா விமானத்தை, நிலநடுக்கம் காரணமாக மீண்டும் மேலே பறக்குமாறு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் அவசரமாக உத்தரவிட்டார். அந்த நேரத்து ஆடியோ பதிவு இப்போது வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா கடற்கரைப் பகுதியில் நவம்பர் 28, 2026 நேற்று காலை ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.
விமான நிலையத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பரபரப்பு
அப்போது லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தை, தரையிறங்க வேண்டாம் என்று விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் எச்சரித்தார். இதனால் விமான நிலையத்தில் சில நிமிடங்கள் பதற்றம் நிலவியது. டெல்டா ஏர்லைன்ஸின் 1972 என்ற விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக நெருங்கிக்கொண்டிருந்தது. அதே நேரத்தில் விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரி கடுமையான அதிர்வுகளை உணர்ந்தார். உடனே அவர் விமானியைத் தொடர்புகொண்டு, தரையிறங்காமல் மீண்டும் மேலே பறக்கும்படி மீண்டும் மீண்டும் உத்தரவிட்டார்.




இதையும் படிக்க : நெடுஞ்சாலையில் கவிழ்ந்து தீப்பற்றிய பெட்ரோல் டேங்கர் லாரி.. 31 பேர் பலி.. எகிப்தில் சோக சம்பவம்!
அப்போது பதிவான ஆடியோவில், “டெல்டா 1972, கோ அரவுண்ட். டெல்டா 1972, கோ அரவுண்ட். இங்கே பெரிய நிலநடுக்கம் வந்து கொண்டிருக்கிறது” என்று கட்டுப்பாட்டாளர் பதற்றத்துடன் கூறுவது தெளிவாகக் கேட்கிறது. கட்டுப்பாட்டாளரின் உத்தரவைக் கேட்ட விமானி உடனடியாகச் செயல்பட்டார். தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டு விமானத்தை மீண்டும் மேலே கொண்டுசென்றார். அதே நேரத்தில் விமான நிலையத்தின் பல பகுதிகள் நிலநடுக்கத்தால் குலுங்கின.
வைரலாகும் வீடியோ
EARTHQUAKE🚨: Air traffic controllers at Los Angeles International Airport called off the landing of a passenger airliner just moments before it touched down during Saturday’s earthquake. https://t.co/ao59SOqJQQ
— For all Curious (@fascinatingonX) November 29, 2026
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, உள்ளூர் நேரப்படி காலை சுமார் 9.30 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிபோர்னியாவின் மன்ஹாட்டன் பீச் கடற்கரையிலிருந்து சுமார் 6 மைல் தொலைவில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தின் தாக்கம் விமான நிலையத்துக்குள்ளும் தெரிந்தது. நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக விமான நிலையத்தின் உள்ளே இருந்த கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. விமான நிலையத்தின் சில பகுதிகள் அதிர்வால் குலுங்கும் காட்சிகள் அங்கிருந்தவர்கள் எடுத்த வீடியோக்களில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
இதையும் படிக்க : நிலவில் உருளைக்கிழங்கு விளைவிக்கலாம்.. அமெரிக்க விஞ்ஞானிகள் அசத்தல்!
பெரும் விபத்து தவிர்ப்பு
நிலநடுக்கத்தால் விமானப் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. ஓடுபாதையில் அதிர்வுகள் இருந்த நேரத்தில் ஒரு விமானம் தரையிறங்கியிருந்தால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் துரிதமாகச் செயல்பட்ட கட்டுப்பாட்டாளரையும், உடனடியாக உத்தரவைப் பின்பற்றிய விமானியையும் பலர் பாராட்டி வருகின்றனர்.