Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வெற்றிமாறன் முதல் மாரி செல்வராஜ் வரை.. வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 10 படங்கள்!

Vels Films International Production House Directors List 2025 To 2027 : கோலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருவது வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல். தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷின் தயாரிப்பு நிறுவனமான, இந்நிறுவனத்தின் கீழ் 2025ம் ஆண்டு முதல் வரும் 2027ம் ஆண்டு வரை வரிசைகட்டும் இயக்குநர்கள் குறித்த பட்டியலை படக்குழு வெளியிட்டுள்ளது.

வெற்றிமாறன் முதல் மாரி செல்வராஜ் வரை.. வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 10 படங்கள்!
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் இயக்குநர்கள் பட்டியல்
barath-murugan
Barath Murugan | Published: 27 Jun 2025 12:30 PM

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஐசரி கே கணேஷ் (Isari K Ganesh). இவர் தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் பல கல்லூரி, பள்ளிக்கூடம் மற்றும் மருத்துவ கல்லூரி என பலவிதமான கல்வி நிலையங்களையும் (Educational institutions) வைத்துள்ளார். இந்நிலையில், இவரின் தயாரிப்பு நிறுவனம்தான் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் (Vels Films International) . இந்த நிறுவனமானது தமிழில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இயக்குநர் சுந்தர் சியின் (Sundar C) இயக்கத்தில் உருவாகிவரும் மூக்குத்தி அம்மன் 2 (Mookuththi Amman 2) படத்தையும் இந்த நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. இந்நிலையில், எந்த தயாரிப்பு நிறுவனங்களும் அறிவிக்காததுபோல, புதிய முயற்சியாக படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அது என்னவென்றால், இந்த 2025ம் ஆண்டு முதல் வரும் 2027ம் ஆண்டுவரை, வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்களை இயக்கவிருக்கும் இயக்குநர்களின் (Directors List) பட்டியலை வெளியிட்டுள்ளது. 2025 முதல் 2027ம் ஆண்டுவரை சுமார் 10 திரைப்படங்களை தயாரிக்கவுள்ளதாம் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டெர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டெர்நேஷனல் வெளியிட்ட இயக்குநர்கள் பட்டியல் :

இயக்குநர்களின் பட்டியல் :

ஐசரி கே கணேசனின் தயாரிப்பின் கீழ் இயக்குநர்கள், சுந்தர் சி, கவுதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பிரேம் குமார், ஜூட் அந்தனி ஜோசப், விக்னேஷ் ராஜா, செல்லா அய்யாவு, கணேஷ் கே.பாபு மற்றும் அருண் ராஜ் காமராஜ் என சுமார் 10 இயக்குனர்கள் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் புதிய படங்களை இயக்கவுள்ளார். இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர்களின் படங்கள் :

இயக்குநர் சுந்தர் சி மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கிவருகிறார், வெற்றிமாறன் வடசென்னை 2 படத்தை தனுஷை வைத்து இயக்கவுள்ளார். மாரி செல்வராஜ் தனுஷின் 56வது படத்தை இயக்குகிறார். மேலும் இயக்குநர் விக்னேஷ் ராஜாவும் தனுஷை வைத்து புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். மற்ற இயக்குநர்கள் இயக்கும் படங்களை குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் மட்டும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் கிட்டத்தட்ட 3 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ள மற்ற இயக்குநர்ர்களின் திரைப்படங்களின் அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.