2025-ல் இதுவரை ரசிகர்களிடையே ஹிட் அடித்த மாஸ் ஹீரோக்களின் படங்கள்!
Kollywood Cinema: 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகளின் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. எதிர்பாராத விதமாக சில படங்கள் வெற்றியையும், எதிர்பாராதவிதமாக சிலப் படங்கள் தோல்வியையும் சந்தித்து வருகின்றது. இந்த நிலையில் கோலிவுட் சினிமாவில் ஹிட் அடித்த மாஸ் ஹீரோக்களின் படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

குட் பேட் அக்லி: நடிகர் அஜித் குமார் (Actor Ajith Kumar) நடிப்பில் இந்த ஆண்டு முதலாவதாக விடாமுயற்சி படம் திரையரங்குகளில் வெளியானது. படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் அது ரசிகர்களுக்கான படமாக இல்லை என்று அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அஜித் குமார் நடிப்பில் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு குட் பேட் அக்லி படம் திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை அஜித் குமாரின் ரசிகர்கள் கொண்டாடித்தீர்த்தனர். அதற்கு காரணம் படத்தின் புதிதாக கதை பெரிய அளவில் இல்லை என்றாலும் அஜித் நடிப்பில் முன்னதாக வெளியாகி ஹிட் அடித்தப் பலப் படங்களின் காட்சிகளை இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இந்தப் படத்தில் ரீ கிரியேட் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான இந்த குட் பேட் அக்லி படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் அஜித்திற்கு ஜோடியாக நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சிம்ரன், அர்ஜுன் தாஸ், பிரபு, பிரசன்னா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் ட்ரெய்லர்:




வீர தீர சூரன் பாகம் 2: நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் வீர தீர சூரன் பாகம் 2. இயக்குநர் அருண் குமார் எழுதி இயக்கிய இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் நடிகர் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு, ப்ருத்விராஜ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2 படத்தின் ட்ரெய்லர்:
ரெட்ரோ: நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில் அவருக்கு வெற்றியின் மகிழ்ச்சியை கொடுத்தப் படம் ரெட்ரோ. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.
ரொமாண்டிக் ஆக்ஷன் ட்ராமாவாக வெளியான இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து இருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், சுவாசிகா, ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ் மற்றும் கருணாகரன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.