Thug Life : கமல்ஹாசன் – சிலம்பரசனின் தக் லைப்-ன் அடுத்த அசத்தல்! வெளியானது ‘அஞ்சு வண்ண பூவே’ வீடியோ சாங் வெளியீடு!
Anju Vanna Poove Video Song : கோலிவுட் சினிமாவில் கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்திலிருந்து தற்போது அஞ்சு வண்ண பூவே என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர்கள் சிலம்பரசன் (Silambarasan) மற்றும் கமல்ஹாசனின் (Kamal Haasan) கூட்டணி திரைப்படமாக இறுதியாக வெளியாகியிருந்தது தக் லைஃப் (Thug Life). இந்த திரைப்படத்தைக் கோலிவுட் முன்னணி இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கியிருந்தார். இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் 2யை தொடர்ந்து இந்த படத்தில் இணைந்தார். இந்த படத்தில் மூல கதையைக் கமல்ஹாசன் எழுதியிருந்தாலும், சில காட்சிகளை இயக்குநர் மணிரத்னமும் மாற்றியமைத்துள்ளார். இதை பற்றி நடிகர் கமல்ஹாசனும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் இந்த தக் லைஃப் படமானது திரையரங்குகளில் வெளியானது. இந்த படமானது காயல்பட்டினத்தை சேர்ந்த கேங்ஸ்டர் (Gangster) ஒருவர் புது தில்லியில் செய்யும் வேலையை பற்றியும் , அவரை சார்ந்து இருக்கும் மற்ற கேங்ஸ்டர்ஸ் பற்றியும் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இந்த படத்தில் முன்னணி நடிகைகளாக அபிராமி மற்றும் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைந்து நடித்திருந்தனர்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியாகியிருந்த இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டான நிலையில், அவரின் குரலில் உருவாகியிருந்த “அஞ்சு வண்ண பூவே” (Anju Vanna Poove) என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்திலும், ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகி வருகிறது.




தக் லைஃப் பட அஞ்சு வண்ண பூவே வீடியோ பாடல் பதிவு :
A Melody Drenched in Soul! ❤#AnjuVannaPoove #AchchaVannePoovvaa Video Song From #ThugLife is Out Now! 🎶💞
A #ManiRatnam Film
An @arrahman Musical🎙 #CharulathaMani
✍🏻 @iamKarthikNetha @IananthaSriram@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran… pic.twitter.com/pk8w5cxD5P— Saregama South (@saregamasouth) June 19, 2025
தக் லைஃப் கர்நாடக ரிலீஸ் நஷ்டம் :
தக் லைஃப் படத்தின் ஓசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் கமல் ஹாசன் , கன்னட மொழியைப் பற்றிக் கூறிய விஷயத்தால், இப்படத்தின் கர்நாடகா ரிலீஸ் ஆரம்பத்தில் தடை செய்யப்பட்டு, பின் தேதியை ஒத்திவைத்து கர்நாடகா உயர்நீதி மன்றம். இதன் காரணமாக கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் கர்நாடகாவில் இப்படம் வெளியாகவில்லை. இதை தொடர்ந்து கமல்ஹாசன் தொடர்ந்த வழக்கின் காரணமாகச் சமீபத்தில் வெளியான அறிவிப்பின்படி தக் லைஃப் படத்தினை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இப்படமானது வெளியாகி 3வாரங்களை தொட்ட நிலையில், இன்னும் 2 வாரங்களுக்குள் ஓடிடியில் வெளியாகிவிடும் இதன் காரணமாகத் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் இருக்காது என்ற காரணத்தால், இப்படத்தின் கர்நாடக ரிலீஸ் உரிமையை வாங்கிய தயாரிப்பு நிறுவனம் வெளியிட மறுத்துள்ளது. இதன் காரணமாக இப்படத்திற்கு சுமார் ரூ 30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தக் லைஃப் படத்தின் மொத்த வசூல் :
இந்த கேங்ஸ்டர்ஸ் கதைக்களம் கொண்ட தக் லைஃப் படத்தில். கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசனின் கதாபாத்திரத்தின் நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது. மேலும் இந்த படத்தில் நடிகை திரிஷாவும் இதுவரை நடித்திடாத ரோலில் நடித்திருந்தார்.
இந்தப் படமானது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம். இந்நிலையில் 3வது வாரத்தை தொட்ட நிலையில், இதுவரை மொத்தம் ரூ. 47.2 கோடி மட்டுமே இந்தியா அளவில் வசூல் செய்துள்ளதாக sacnilk இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.