Thug Life: கர்நாடகாவில் வெளியாகாத ‘தக் லைஃப்’.. 30 கோடி நஷ்டத்தில் தயாரிப்பு நிறுவனம்!
Thug life Production company Loss : தமிழ் சினிமாவில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசனின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் தக் லைஃப். இந்த படமானது கர்நாடகாவில் வெளியாகாத நிலையில், இப்படத்தின் கர்நாடக ரிலீஸ் உரிமையைப் பெற்ற நிறுவனத்திற்கு 30 கோடி நஷ்டம் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). பிரம்மாண்ட எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்தில், முன்னணி கதாபாத்திரங்களில் கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் சிலம்பரசன் (Silambarasan) இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது முழுக்க மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியிருந்தாலும், இந்த படத்தின் கதையை நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ளார். இவரின் எழுத்தில் உருவாகியிருக்கும் இப்படமானது ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் முன்னணி கதாநாயகியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் நடித்திருந்தார். இப்படத்தில் கமல்ஹாசனுக்கு, திரிஷா (Tirisha) மற்றும் அபிராமி என இரு கதாநாயகிகள் ஜோடியாக நடித்திருந்தனர். அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் இந்த தக் லைஃப் படமானது உலகமெங்கும் வெளியாகியிருந்தது.
இந்த படமானது தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகத் தயாராகியிருந்த நிலையில், இசை வெளியீட்டு விழாவின் போது கமல்ஹாசன் கன்னட மொழியை பற்றி தவறாகப் பேசினார் என்று, கர்நாடகாவில் (Karnataka) இப்படத்தை ரிலீஸ் செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்தது.




தக் லைப் கர்நாடகா ரிலீஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் நஷ்டம் :
அதைத் தொடர்ந்து மற்ற மொழிகளில் படம் வெளியாகி 2 வாரங்களைக் கடந்த நிலையில், இன்னும் கர்நாடகாவில் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்த நிலையில் சமீபத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றம் படத்தை வெளியிட உத்தரவிட்டிருந்தது. மேலும் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் இப்படத்தின் கன்னட ரிலீஸ் உரிமையைப் பெற்ற தயாரிப்பாளர் வெங்கடேஷ் கமலகர் இப்படத்தைக் கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்றும் கூறியுள்ளார். 2025, ஜூன் 20ம் தேதியில் மொத்தம் 3 படங்கள் வெளியாகவுள்ள நிலையில், தக் லைஃப் படத்தை ரிலீஸ் செய்வதற்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தக் லைஃப் படமானது இன்னும் 2 வாரங்களில் ஓடிடியில் வெளியாகிவிடும் என்பதால் கர்நாடகாவில் வெளியிடமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக தக் லைஃப் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சுமார் ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
#Thuglife In Cinemas Near You #Thuglife#KamalHaasan #SilambarasanTR
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath @trishtrashers @AishuL_ @AshokSelvan @abhiramiact @C_I_N_E_M_A_A #Nasser @manjrekarmahesh @TanikellaBharni… pic.twitter.com/gOqpYuzPWH— Raaj Kamal Films International (@RKFI) June 7, 2025
தக் லைஃப் படத்தின் தோல்வி :
கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசனின் முன்னணி நடிப்பில் இந்த தக் லைஃப் படமானது கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்த நிலையில், அவர்களின் எதிர்பார்ப்புகளை இப்படம் பூர்த்தி செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் கதைக்களமும் அந்த அளவிற்கு நன்றாக இல்லை என்று ரசிகர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். இப்படமானது வெளியாகி 2 வாரங்களை கடந்த நிலையில், வரும் 2025, ஜூலை முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.