Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

Anirudh Ravichander : அனிருத்தின் சிறப்பான சம்பவம்.. கோலிவுட் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் ட்ரீட்!

Anirudhs Most Anticipated Films In 2025 : தமிழ் சினிமாவையும் கடந்து பான் இந்திய இசையமைப்பாளராகக் கருதப்படுபவர் அனிருத் ரவிச்சந்தர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரின் இசையமைப்பில் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கக்கூடிய படங்களின் பட்டியல் குறித்துப் பார்க்கலாம்.

Anirudh Ravichander : அனிருத்தின் சிறப்பான சம்பவம்.. கோலிவுட் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் ட்ரீட்!
அனிருத் ரவிச்சந்தர்Image Source: Instagram
barath-murugan
Barath Murugan | Published: 18 Jun 2025 21:25 PM

கோலிவுட் சினிமாவில் ஆரம்பத்தில் சிறு சிறு படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி தற்போது, பல கோடி பட்ஜெட் படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு பிரபலமானார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருந்து வருகிறார். சினிமா குடும்பத்தில் பிறந்த இவர் தனது சிறு வயதில் இருந்தே இசையின் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளார். இவரின் இசையமைப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) நடித்து வரும் படங்களுக்கு மொத்தமாக இசையமைப்பாளர் அனிருத்தான் இசையமைத்துள்ளார்.

ஜெயிலர் (Jailer) முதல் வேட்டையன் (Vettaiyan) வரை பல ரஜினி படங்களுக்கு இவர்தான் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இந்த 2025ம் ஆண்டு இவரின் இசையமைப்பில் ரசிகர்களும் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய படங்களின் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

ஜன நாயகன் :

இந்த பட்டியலில் அதிக எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் படம்தான் ஜன நாயகன். தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புகள் இருக்கிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தை, கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனமானது தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

விஜய்யின் இறுதி படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகம், மேலும் வரும் 2025, ஜூன் 22ம் தேதியில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜன நாயகன் படத்திலிருந்து கிலிம்ப்ஸ் அல்லது அனிருத்தின் இசையமைப்பில் முதல் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனிருத்தின் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Anirudh (@anirudhofficial)

 

கூலி திரைப்படம் ;

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் , நடிகர் ரஜினி நடித்திருக்கும் படம்தான் கூலி. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திலிருந்து ‘சிக்கிடு வைப்’ என்ற தீம் பாடல் வெளியிடப்பட்ட நிலையில், மேலும் இப்படத்தின் முதல் பாடலும் அனிருத்தின் இசையமைப்பில் இந்த 2025, ஜூன் மாதத்தின் இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதராஸி திரைப்படம் :

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமான ஆக்ஷ்ன் படமாக உருவாகியிருப்பது மதராஸி. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி நாயகனாக நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பின் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளியாகும் ஆக்ஷ்ன் படமாக இந்த மதராஸி அமைந்துள்ளது. இந்தப் படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் என்ற நிறுவனமானது தயாரித்த வருகிறது.

இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்னும் 2 மாதங்கள் மட்டும் உள்ள நிலையில், அனிருத்தின் இசையமைப்பில் இப்படத்திலிருந்தும் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

பார்வைக் குறைபாடு ஏற்படுதவை சொல்லும் 3 அறிகுறிகள்?
பார்வைக் குறைபாடு ஏற்படுதவை சொல்லும் 3 அறிகுறிகள்?...
சாப்பிட்டவுடன் சிறிது நேரம் நடப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!
சாப்பிட்டவுடன் சிறிது நேரம் நடப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!...
சோலோ டிராவல் பண்ணப்போறீங்களா? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க!
சோலோ டிராவல் பண்ணப்போறீங்களா? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க!...
2026 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு..!
2026 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு..!...
சாகித்ய அகடாமி விருது.. விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால புரஸ்கார்
சாகித்ய அகடாமி விருது.. விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால புரஸ்கார்...
அப்போது மணிரத்னம் சாரிடம் வசமாக சிக்கிவிட்டேன்.. கார்த்தி!
அப்போது மணிரத்னம் சாரிடம் வசமாக சிக்கிவிட்டேன்.. கார்த்தி!...
வீட்டிலேயே சுவையான கோபி பிரைட் ரைஸ் செய்வது எப்படி..?
வீட்டிலேயே சுவையான கோபி பிரைட் ரைஸ் செய்வது எப்படி..?...
அந்த விஷயத்தில் ஆர்யாவைப் பார்த்து வியந்தேன் - ரவி மோகன்!
அந்த விஷயத்தில் ஆர்யாவைப் பார்த்து வியந்தேன் - ரவி மோகன்!...
அந்த படத்தில் டான்ஸ் ஆட கஷ்டப்பட்டேன் - நடிகை சிம்ரன்
அந்த படத்தில் டான்ஸ் ஆட கஷ்டப்பட்டேன் - நடிகை சிம்ரன்...
'குபேரா நிச்சயம் அருமையான படம்' - குபேரா இயக்குநர் பேச்சு!
'குபேரா நிச்சயம் அருமையான படம்' - குபேரா இயக்குநர் பேச்சு!...
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் விளக்கம்
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் விளக்கம்...