AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு என் முதல் சாய்ஸ் இல்லை – கவுதம் வாசுதேவ் மேனன் பேச்சு!

Gautham Vasudev Menon About Vinnaithaandi Varuvaayaa Casting Choices : கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகராக இருந்து வருபவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவரின் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படத்தில் முதலில் சிலம்பரசனை நடிக்கவைக்க விரும்பவில்லை என்பது பற்றி கவுதம் வாசுதேவ் மேனன் பேசியுள்ளார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு என் முதல் சாய்ஸ் இல்லை – கவுதம் வாசுதேவ் மேனன் பேச்சு!
கவுதம் வாசுதேவ் மேனன் Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 25 Jun 2025 20:50 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் கவுதம் வாசுதேவ் மேனன் (Gautham Vasudev Menon) . இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் பல திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில், இவர் தற்போது திரைப்படங்களை இயக்குவதைத் தொடர்ந்து, படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. மேலும் இவரின் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வரும் திரைப்படம்தான் விண்ணைதாண்டி வருவாயா (Vinnaithaandi Varuvaayaa) . கடந்த 2010ம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் (Silamrasan)  மற்றும் திரிஷா கிருஷ்ணனின் (Trisha Krishnan) நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது. இப்படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடிகர் நாக சைதன்யாவும் மற்றும் நடிகை சமந்தா ரூத் பிரபுவும் (Samantha Ruth Prabhu) இப்படத்தில் இணைந்தது நடித்திருந்தனர்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், இந்த படத்தில் ஆரம்பத்தில் புதுமுக நடிகர்களை வைத்து எடுக்க நினைத்ததாகவும், அதன் பிறகுதான் சிலம்பரசனை அணுகியதாகப் பேசியுள்ளார். அதை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

கவுதம் வாசுதேவ் மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா படம் பற்றி பேசிய பதிவு :

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பேசிய விஷயம் :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பற்றிப் பேசியிருந்தார். அதில் அவர், ஆரம்பத்தில் இந்த படத்தை வேறு புதிய நடிகர்களை வைத்து இயக்கலாம் என்ற திட்டத்துடன்தான் இருந்தேன். அதற்காக நான் சுமார் 6 மாதங்கள் வேலை பார்த்தேன். நல்லவேளை அந்த மாதரி நான் புதிய நடிகர்களை வைத்து இப்படத்தை இயக்கவில்லை. அவ்வாறு புதிய நடிகர்களை வைத்து இந்த படத்தை இயக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் சிலம்பரசனை தவிர யாராலும் இந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கமுடியாது. மேலும் கடினமான நேரத்தில்தான் நான் சிலம்பரசனை சந்தித்தேன், மேலும் சிலம்பரசன் அந்த நேரம் செய்துகொண்டிருந்த திரைப்படங்களுக்கும், இப்படத்திற்கும் சுத்தமாக சம்பந்தமே இல்லாமல்தான் இருக்கும்.

ஆனாலும் சிலம்பரசன் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்ற காரணத்தால்தான் இப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். மேலும் சிலம்பரசன் என்னிடம், “நிச்சயம் இப்படத்தில் நடிக்கிறேன் என்னுடைய புதிய ஸ்டைலில் நடிக்கிறேன், எனது உடல்மொழியை மாற்றி இப்படத்தில் நடித்துக் காட்டுகிறேன் உங்களுக்குப் பிடித்திருந்தால் அதையே பண்ணலாம்” என சிலம்பரசன் என்னிடம் கூறினார்.

ஆனால் இப்படத்திற்கு சிலம்பரசன் சரியாக இருப்பாராக என நான் யோசித்தேன், மேலும் நான் அதைத் தவறென நினைத்தேன். முதல் நாள் ஷூட்டிங்கில் கூட இப்படம் நன்றாக வருமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் போகப் போக இப்படம் நிச்சயம் ஹிட்டாகும் என நம்பிக்கை வந்தது என இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பேசியிருந்தார்.

Follow Us