Ameer: ஜன நாயகன் பட காட்சியிலும் இஸ்லாமியர்கள்தான் தீவிரவாதிகளா? – சாடிய இயக்குநர் அமீர்!

Ameer Condemns Jana Nayagan Movie: இயக்குநர் அமீர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் இருந்துவருகிறார். சமீபத்தில் தளபதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படமானது இணையத்தில் கசிந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஜன நாயகன் படத்தின் காட்சியில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டியிருப்பதாக அமீர் சாடியுள்ளார்.

Ameer: ஜன நாயகன் பட காட்சியிலும் இஸ்லாமியர்கள்தான் தீவிரவாதிகளா? - சாடிய இயக்குநர் அமீர்!

ஜன நாயகன் படம் குறித்து அமீர்

Updated On: 

10 Apr 2026 19:18 PM

 IST

கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநர் மற்றும் நடிகராக இருப்பவர் அமீர் (Ameer). இவர் தொடர்ந்து தற்போது படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக தமிழில் பைசன் என்ற படம் வெளியானது. இப்படத்தை இயக்குந ர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கியிருந்த நிலையில், இப்படத்தில் மிகவும் முக்கியமான வேடத்தில் அமீர் நடித்திருந்தார். இந்த படமானது அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது என்று கூறலாம். அந்த வகையில் தொடர்ந்து சினிமாவில் வித்தியாசமான வேடங்களில் நடித்து அசத்திவருகிறார். அந்த வகையில் இவர் இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் தற்போது அரசன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படமானது வட சென்னை படத்தின் டைம் லைனில் நடக்கும் மற்றொரு கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவரும் நிலையில், இதில் அமீர் நடித்துவருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் ஜன நாயகன் (Jana Nayagan) படம் இணையத்தில் லீக்கானது பேசப்பட்டுவருகிறது.

இந்நிலையில் இப்படம் முழுவதமாக லீக்காகியிருக்கும் நிலையில், அதில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டியுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது. அந்த வகையில் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் இயக்குநர் அமீர் தனது வாட்ஸ்ஆப்பில் பகிந்துள்ளார். இது தற்போது இணையத்தில் பேசும்பொருளாகியுள்ளது.

இதையும் படிங்க: இதெல்லாம் நியாயமே இல்லை… தளபதி விஜய்காக குரல் கொடுத்த சூர்யா!

ஜன நாயகன் படம் குறித்து கண்டனம் தெரிவித்து இயக்குநர் அமீர் சொன்ன விஷயம்:

இயக்குநர் அமீர் தனது வாட்ஸ்ஆப் பக்கத்தில், “கசிந்திருக்கும் ஜனநாயகன் படக் காட்சியிலும் இஸ்லாமியர்கள் தான் தீவிரவாதிகளா? இது தான் தங்களின் அரசியலா? எப்போது தான் மாறும் இந்த மனநிலை?” என அதில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் ஜன நாயகன் படம் லீக்கானது குறித்து வருத்தம் தெரிவித்தும், அந்த படத்தை இணையத்தியல் பகிரவேண்டாம் என ஆதரவு பதிவை வெளியிட்டுவரும் நிலையில், இயக்குநர் அமீர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருப்பது பேசும்பொருளாகியுள்ளது.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்திலிருந்து விலகிய ஷாருக்கான்..? இணைந்த தெலுங்கு பிரபலம் யார் தெரியுமா?

ஜன நாயகன் படம் குறித்து கண்டனம் தெரிவித்து இயக்குநர் அமீர் வெளியிட்ட பதிவு:

தளபதி விஜய் ஜன நாயகன் திரைப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், இணையத்தில் முழு படமும் கசிந்துள்ளது. இதுகுறித்து மொத்த தென்னிந்திய சினிமாவே பரபரப்பாக பேசிவரும் நிலையில், இயக்குநர் அமீர் ஜன நாயகன் படத்திற்கு எதிராக கருத்தை தெரிவித்த விஷயம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல ரசிகர்கள் கோபத்தில் தங்களின் கருத்துக்களையும் இணையத்தில் வெளியிட்டுவருகின்றனர்.

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?