AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக ஆட்சி அமைப்பதில் தொடரும் சிக்கல்.. நள்ளிரவில் ஆளுநர் மாளிகையில் நடந்த உச்சகட்ட பரபரப்பு..

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆளுநரைச் சந்தித்து அதிரடி புகார் ஒன்றை அளித்தார். அதில், மன்னார்குடி அ.ம.மு.க எம்.எல்.ஏ எஸ். காமராஜின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக தவெக தரப்பில் ஆளுநருக்கு போலி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தவெக மோசடி வேலையில் ஈடுபட்டு எங்கள் எம்.எல்.ஏ-வைக் கடத்தப் பார்ப்பதாக குற்றச்சாட்டு.

தவெக ஆட்சி அமைப்பதில் தொடரும் சிக்கல்.. நள்ளிரவில் ஆளுநர் மாளிகையில் நடந்த உச்சகட்ட பரபரப்பு..
ஆளுநர் மாளிகையில் விஜய், டிடிவி தினகரன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 09 May 2026 06:58 AM IST

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காததால், காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில், காங்கிரஸ் முதல் ஆளாக திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு, தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது. தொடர்ந்து, நேற்றைய தினம் 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் தவெகவுக்கு தங்களது ஆதரவை வழங்கியுள்ளன. தவெகவுடன் கூட்டணி எதுவும் கிடையாது, வெளியே இருந்து மட்டும் ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளன. இதனிடையே, விசிகவும் ஆதரவு தெரிவித்தாக கூறப்படுகிறது. ஆனால், அக்கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இதையும் படிக்க : காலத்தின் கட்டாயம் – தவெகவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்:

இந்நிலையில், நேற்று மாலை தவெக தலைவர் விஜய் ஆளுநர் அர்லேகாரை சந்தித்து ஆட்சி அமைக்க மீண்டும் உரிமை கோரினார். அப்போது தனக்கு பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதல் ஆதரவு உள்ளதாகவும் ஆளுநரிடம் கடிதம் வழங்கியுள்ளார். அதில், காங்கிரஸ் – 5, மா.கம்யூ., – 2, இந்திய கம்யூ., – 2, விசிக -2, ஐயூஎம்எல் – 1, அமமுக -1 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இன்றைய தினம் விஜய் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டதால், அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்தில் ஐயூஎம்எல் கட்சி தரப்பில் தாங்கம் தவெகவுக்கு எந்த ஆதரவும் வழங்கவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதோடு, விசிகவும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை.

ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநர்:

இதனிடையே, ஆளுநரும் முறையாக அழைப்பு விடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால், மேலும் பரபரப்பு அதிகரித்து வந்தது. இந்த பரபரப்புக்கு மத்தியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆளுநரைச் சந்தித்து அதிரடி புகார் ஒன்றை அளித்தார். அதில், மன்னார்குடி அ.ம.மு.க எம்.எல்.ஏ எஸ். காமராஜின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக தவெக தரப்பில் ஆளுநருக்கு போலி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ராவணன் சீதையைத் தூக்கியது போல, தவெக மோசடி வேலையில் ஈடுபட்டு எங்கள் எம்.எல்.ஏ-வைக் கடத்தப் பார்க்கிறது என்று குற்றஞ்சாட்டினார்.

அமமுக எம்எல்ஏ-வை காணவில்லை:

காமராஜ் அ.தி.மு.க-வை (எடப்பாடி பழனிசாமி தரப்பு) ஆதரிக்கவே கடிதம் கொடுத்துள்ளார். த.வெ.க-வுக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தில் உள்ளது அவரது கையெழுத்தே அல்ல. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தினகரன் குற்றம் சாட்டினார். அதோடு, தனது எம்எல்ஏவை காணவில்லை எனவும் ஆளுநரிடம் புகார் அளித்தார். உடனே காணாமல்போன அமமுக எம்எல்ஏவை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவரது செல்போன் எண்ணும் அனைத்து வைக்கப்பட்டதாக டிடிவி தினகரன் பரபரப்பை கிளப்பினார். இந்த பரபரப்பு சம்பவங்கள் நடக்கும்போதே இரவு 9 மணியை கடந்துவிட்டது.

நள்ளிரவில் ஆளுநர் மாளிகை வந்த அமமுக எம்எல்ஏ:

இந்நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் அமமுக எம்எல்ஏ காமராஜ் ஆளுநர் இல்லம் வருகை தந்ததார். இதைத்தொடர்ந்து, டிடிவி தினகரனும் நள்ளிரவில் ஆளுநரை மீண்டும் சந்தித்தார். இதனால், நள்ளிரவில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. காமராஜை தொடர்பு கொள்ள முடியவில்லை என டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில், அவர்கள் இருவரும் மக்கள் மாளிகைக்கு சென்றனர். ஆளுநரை சந்தித்தபின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதையும் படிக்க : தவெகவுடன் கூட்டணி இல்லை, வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு – கம்யூனிஸ்ட் கட்சிகள் பரபரப்பு தகவல்

காமராஜ் தவெகவுக்கு ஆதரவு தரவில்லை:

அப்போது, டி.டி.வி. தினகரன் கூறும்போது, ஆளுநரிடம் தவெக கொடுத்த கடிதத்திற்கும் காமராஜுக்கும் தொடர்பு இல்லை. அந்த கடிதம் போலியானது என்றார். உங்களுக்கு 108 எம்எல்ஏக்களே உள்ளனர். அறுதி பெரும்பான்மையே இன்னும் இல்லை. நீங்கள் தூய சக்தி. தூய்மையான ஆட்சியை கொடுக்க போகிறீர்கள். ஆனால், ராவணன் சீதையை தூக்கியதுபோல், ஒரேயொரு கடித நகலை கொடுத்து எங்களுடைய எம்எல்ஏவை தூக்க பார்த்துள்ளனர். அமமு.க. ஆதரவு உள்ளது என்று தவறான தகவலை கவர்னரிடம், த.வெ.க. அளித்துள்ளனர். ஆனால், காமராஜ் ஆதரவு தரவில்லை. அதோடு, ஒரேயொரு எம்.எல்.ஏ. எங்களிடம் உள்ளார். அதனால், கட்சி தாவல் தடை சட்டம் செல்லாது என்று இதுபோன்று செயல்படுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

Follow Us