AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாக்கு எண்ணிக்கை அன்று ஆஸ்திரேலியா செல்லும் விஜய்? வெளியான தகவல்

TVK Vijay : சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து வருகிற மே 4, 2026 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் அன்றைய தினம் தவெக தலைவர் விஜய் ஆஸ்திரேலேயா செல்லவிருப்பதாகவும் அதற்கான விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை அன்று ஆஸ்திரேலியா செல்லும் விஜய்? வெளியான தகவல்
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Apr 2026 15:28 PM IST

சென்னை, ஏப்ரல் 25 : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23, 2026 அன்றுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4, 2026 அன்று நடைபெற்று முடிவுகள் அன்று மாலையே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் புதிதாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களம் காணுகிறது. இதனால் அந்த கட்சி இந்த தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் வெளிநாடு செல்லவிருப்பதாகவும் அதற்கான விமான டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை அன்று ஆஸ்திரேலியா செல்லும் விஜய்?

தேர்தல் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பணிகளில் இருந்து சிறிது ஓய்வெடுப்பதற்காக சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். அந்த வகையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துடன் துபாய் சென்றுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது கொடைக்கானலுக்கு 4 நாட்கள் பயணமாக சென்றுள்ளார்.

இதையும் படிக்க : திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.. சொல்லப்பட்ட முக்கிய விஷயம்..

அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யும் வருகிற மே 4, 2026 அன்று வாக்கு எண்ணிக்கை அன்று ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான விமான டிக்கெட்டும் அவர் முன்பதிவு செய்யப்பட்டுள்ளப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 85.15 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டிய தேவை இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மே 4, 2026 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

இதையும் படிக்க :  85% வாக்குப்பதிவு என்பது தமிழ்நாடு இதுவரை கண்டிராத ஒன்று.. தவெக தலைவர் விஜய்..

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பட்ட கூட்டணி, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டிகள் நிலவுகிறது.  எந்த கட்சிகள் அதிக தொகுதியில் வென்று ஆட்சியமைக்கப்போகிறது என்ற கேள்வி மக்களிடையே அதிகரித்துள்ளது.  இந்த முறை புதிதாக களமிறங்கியுள்ள விஜய்யின் தவெக எந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதற்கான விடைகள் வருகிற மே 4, 2026 அன்று தெரிய வரும்.

Follow Us