AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய்யுடன் எந்த காலத்திலும் கூட்டணி அமைக்கும் நிலை பாஜகவுக்கு ஏற்படாது… தேசிய தலைவர் நிதின் நபீன்!

Bjp National Leader Nitin Nabin: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்துடன், பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அமைக்கும் நிலை ஏற்படாது என்று அந்தக் கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபீன் தெரிவித்தார். மேலும், திமுகவை விமர்சித்தார்.

விஜய்யுடன் எந்த காலத்திலும் கூட்டணி அமைக்கும் நிலை பாஜகவுக்கு ஏற்படாது… தேசிய தலைவர் நிதின் நபீன்!
விஜய்யுடன் பாஜக கூட்டணி அமைக்கும் நிலை ஏற்படாது
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 24 Apr 2026 08:44 AM IST

தமிழகத்தில் தவெகவுடன், பாஜக கூட்டணி அமைக்காது என்று அந்தக் கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்தார். இது தொடர்பாக தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்திருந்த அவர் கூறியதாவது: 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் நிலவரம் வெவ்வேறு விதமாக உள்ளது. இருந்தாலும் அந்த மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமான சூழல் நிலவி வருவதாக தெரிகிறது. இதில், புதுச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களில் பாஜக அரசு நிச்சயமாக ஆட்சி அமைக்கும். மேற்கு வங்க மாநிலத்தை பொருத்தவரை பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக ஆச்சரியம் அளிக்கும் தேர்தல் முடிவுகள் வரப்போகிறது. அந்த மாநிலத்தில் முதல் முறையாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும். இதில், 100 சதவீதம் அளவுக்கு வெற்றி பெறுவது உறுதி. 5 மாநில மக்களின் மனநிலையை பார்க்கும் போது நிச்சயம் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது தெரிகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக ஆட்சியமைக்கும்

இந்த தேர்தல்களில் எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பது தற்போது கூற முடியாது. போகப்போக தெளிவான நிலை உருவாகும். தற்போதைய நிலவரங்களின் அடிப்படையில் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும். இதேபோல, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்குகிறது. நாங்கள் தலைமை கட்சி கிடையாது. ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 5 ஆண்டு கால ஆட்சியில் ஊழல், சனாதன எதிர்ப்பு, அராஜகம் ஆகியவற்றிற்கு எதிரான மக்கள் மனநிலை காணப்படுகிறது.

மேலும் படிக்க: “ஆரம்பத்தில் பயம்.. அப்புறம் உற்சாகம்!” – முதல்முறை வாக்காளர்களின் நெகிழ்ச்சியான தேர்தல் அனுபவங்கள்!

திமுகவுக்கு எதிரான அலை வீசி வருகிறது

தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு எதிரான அலை வீசி வருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. நான் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகள் திரட்டி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தேன். அந்த அனுபவத்தில் கூறுகிறேன், நிச்சயமாக இந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சிகளுக்கு கணிசமான பின்னடைவு ஏற்படும். தமிழக அரசியல் களத்துக்கு நடிகர் விஜய் புதிதாக வந்துள்ளார். இதனால், வந்த வேகத்தில் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

தவெகவுடன் கூட்டணி அமைக்கும் நிலை ஏற்படாது

தமிழகத்தை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி மிக மிக வலிமையாக உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படாது. மொத்தத்தில் தவெக தலைவர் விஜயுடன் கூட்டணி அமைக்க தேவையில்லை. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் போட்டியிட்டுள்ளனர். அதன் அடிப்படையில், தேசிய ஜனநாயக கூட்டணி தனித்தே ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: Tamil Nadu Election Voting: தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்.. தனி ஆளாக வாக்களித்த இளம் பெண்..

Follow Us