திமுக கூட்டணியில் தோழமை கட்சிகள் நம்பிக்கை இழந்து வருகின்றன…தமிழிசை செளந்தர ராஜன் தாக்கு!

Tamilisai Soundararajan: திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கும் வகிக்கும் கட்சிகள் நம்பிக்கை இழுந்து வருவதாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் தெரிவித்தார். மேலும், திராவிட முன்னேற்றக் கழகத்தை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார் .

திமுக கூட்டணியில் தோழமை கட்சிகள் நம்பிக்கை இழந்து வருகின்றன...தமிழிசை செளந்தர ராஜன் தாக்கு!

திமுக கூட்டணியில் நம்பிக்கை இழக்கும் கட்சிகள்

Published: 

07 Feb 2026 13:32 PM

 IST

சென்னை வேளச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்வில் தமிழிசை செளந்தர ராஜன் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் யாரெல்லாம் இணைய வேண்டும் என்று விரும்பினார்களோ அவர்களை இணைக்கும் வகையில் துரைசாமி தலைமையில் பாஜக குழு அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகள் துரைசாமியை அணுகி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து கொள்ளலாம். தமிழகத்தில் வெற்றி பெறக்கூடிய கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் வெளியேறும் நிலையில் உள்ளது. பாரதிய ஜனதா கட்சியில் அடிப்படையில் இருந்து வந்த தலைவர்களை பற்றி பேசுவதற்கு தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது.

எடப்பாடியை முதல்வர் ஆக்குவதே இலக்கு

விருதுநகரில் பிறந்து அனைவருக்கும் கல்வியை கொடுத்த மாபெரும் தலைவர் காமராஜரை தோற்கடித்த ஊரில் திராவிட முன்னேற்ற கழகம் இளைஞரணி நிர்வாகிகள் மாநாட்டை நடத்துகிறது. இதன் காரணமாகவே திராவிட முன்னேற்ற கழக கூட்டணியை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள். பாரதிய ஜனதா கட்சியில் அடிப்படையில் இருந்து வரும் கட்சியினருக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும். ஆனால், திமுகவைப் போல வாரிசு அரசியலுக்கு அங்கீகாரம் கொடுப்பது கிடையாது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவதே பாஜகவினருக்கு சந்தோசம்.

மேலும் படிக்க: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி…மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை!

பிரதமரை தாக்க முயற்சி செய்தது வெட்க கேடாகும்

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை தயார் செய்து அதன் மூலம் மக்களுக்கு அனைத்தும் கிடைப்பதே எங்களது நோக்கமாகும். தமிழுக்கு பாஜக அநீதி இழைப்பதாக கூறுகின்றனர். ஆனால், தமிழுக்கு பாஜக மகுடம் சூட்டி வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவதில் எந்த சந்தேகமும் கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி உறுதி ஆகி வருகிறது. ஆனால், எதிர்க் கட்சிகள் கூட்டணி உதிரியாகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் பிரதமர் மோடியை தாக்க முயற்சி செய்வது வெட்கக்கேடான செயலாகும்.

திமுக கூட்டணி கட்சிகளிடம் நம்பிக்கை இழக்கிறது

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவுக்கு தமிழக மக்கள் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். திருமாவளவன் உள்ளிட்ட நபர்களுக்கு சமூக நீதி குறித்து பேசுவதற்கு தார்மீக உரிமை கிடையாது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கட்சிகள் மத்தியில் நம்பிக்கை இழந்துள்ளது. பாஜக தலைமை எங்கு போட்டியிட கூறுகிறதோ, அங்கே நான் போட்டியிடுவேன். ஹிந்து கோவில்கள் வேண்டாம் என்று கூறிவிட்டு அந்த கோயில்களில் உள்ள உண்டியல் காணிக்கை மட்டும் வேண்டும் என்று கூறுகின்றனர்.

மேலும் படிக்க: மத்திய பட்ஜெட்.. பாஜகவை கண்டித்து பிப்.12 திமுக, கூட்டணிக் கட்சிகள் போராட்டம் அறிவிப்பு!

Related Stories
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி…மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை!
திமுக கூட்டணியில் இம்முறை இரட்டை இலக்க இடங்கள் தான் கேட்கப்போகிறோம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் திட்டவட்டம்..
திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும்…திருமாவளவன் வீசிய குண்டு..பாமகவை குறிப்பிட்டு பேசியதென்ன!
திமுகவிற்கு 2.0 இல்லை.. பூஜ்ஜியம் தான் கிடைக்கும் – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்..
யாருடன் கூட்டணி? பிப். 17 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த உறுதி..
இடைக்கால பட்ஜெட்டில் பொதுமக்கள் எதிர்பார்க்கும் அறிவிப்புகள்…தங்கம் தென்னரசு தகவல்!
சிரஞ்சீவி - மோகன்லாலின் மெகா கூட்டணி இணையும் படம் - வெளியான அப்டேட்
அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரனின் ஏகே 64 - தயாரிப்பாளர் இவரா?
இரு விமானங்களில் இறக்கைகள் உரசியதால் பரபரப்பு
4 கி.மீ கடலில் நீந்தி தனது குடும்பத்தைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன்