AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ruby R. Manoharan Tamil Nadu Election: நாங்குநேரி தொகுதியை தக்க வைத்துக் கொள்வாரா ரூபி ஆர்.மனோகரன்!

Tamil Nadu Elections 2026: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தது முதல் சட்டமன்ற தேர்தல் எதிர்கொண்டு தனது சொந்த முயற்சியின் மூலமாக வெற்றியை தக்க வைத்துக் கொண்டு எம்எல்ஏ- ஆக வலம் வந்து கொண்டிருக்கும் ரூபி. ஆர். மனோகரன் மீண்டும் வெற்றியை எட்டிப்பிடிப்பாரா.

Ruby R. Manoharan Tamil Nadu Election: நாங்குநேரி தொகுதியை தக்க வைத்துக் கொள்வாரா ரூபி ஆர்.மனோகரன்!
நாங்குநேரி தொகுதியை தக்கவைத்துக் கொள்வாரா
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 04 Apr 2026 18:51 PM IST

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்து வருபவர் ரூபி ஆர். மனோகரன். இவர், நடந்த 1959- ஆம் ஆண்டு மே 25- ஆம் தேதி பிறந்தார். கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவுடன் இந்திய விமானப்படையில் அதிகாரியாக பணியில் சேர்ந்த அவர், 10 ஆண்டுகளாக பணி புரிந்தார். பின்னர், அரசியல் ஈடுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார். பின்னர், கட்சியில் கட்சி பணி ஆற்றி வந்த மனோகரன் கன்னியாகுமரி மாவட்டம், குன்னத்தூரில் பள்ளியை நடத்தி வந்தார். இதனிடையே மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவதற்கு ரூபி ஆர். மனோகரன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் அந்த தொகுதி வசந்த் குமாருக்கு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் எம்.பி. ஆக வெற்றி பெற்ற நிலையில், நாங்குநேரி தொகுதியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

நாங்குனேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்

இதன் காரணமாக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அப்போது, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் என். கணேசராஜாவை வீழ்த்தி 45.51 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ரூபி மனோகரன் அந்த பகுதியில் மிகுந்த செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்து வருகிறார். மேலு்ம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தலைவர் சோனியா காந்தியின் நம்பிக்கைகுரியவராக திகழ்ந்து வருகிறார்.

மேலும் படிக்க: K.A.Sengottaiyan Tamil Nadu Election: தவெகவில் ஐக்கியமான செங்கோட்டையன்.. கோபி தொகுதியை தக்க வைப்பாரா?!

நாங்குனேரி சட்டமன்ற தொகுதியை தக்க வைப்பாரா

காங்கிரஸ் கட்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரூபி ஆர். மனோகரன் தேர்தலுக்காக கட்சி நிதி எதுவும் வேண்டாம். அனைத்து செலவுகளையும் நானே பார்த்துக் கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்ததுடன், அந்த தேர்தலில் வெற்றியும் பெற்றார். இதனால், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரூபி ஆர். மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ரூபி ஆர். மனோகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

இதனால், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ரூபி ஆர். மனோகரன் வெற்றி பெற்று மீண்டும் எம்எல்ஏ பதவியை அடைவார் என்று கூட்டணி கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இதே போல, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளும் ரூபி ஆர். மனோகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: D. Jayakumar Tamil Nadu Election: 5 முறை வெற்றி.. 2 முறை தோல்வி… ராயபுரத்தில் வெற்றிக் கனியை தட்டி பறிப்பாரா ஜெயக்குமார்!

Follow Us