பரப்புரைக்கு வரும் விஜய்க்கு கருப்பு கொடி காட்டுவோம் – ரஜினி ரசிகர்கள் முடிவு
Black Flag Against Vijay : நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் மிரட்டலுக்கு பயந்து கட்சி தொடங்குவதில் இருந்து பின்வாங்கியதாக தவெக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்த நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் மேலூருக்கு வந்தால் கருப்பு கொடி கொட்டுவோம் என ரஜினி ரஜினிகர்கள் எச்சரித்துள்ளனர்.

ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ராஜ பாண்டியன் - விஜய்
மதுரை, மார்ச் 19 : தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக – பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டிகள் நிலவி வருகின்றன. குறிப்பாக இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கியுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மக்களிடையே எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. முதலில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணையவுள்ளதாகவும் அதற்காக பாஜகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாான நிலையில் அதனை விஜய் உட்பட தவெக நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.
இந்த நிலையில் தவெக கட்சியின் பொதுச்செயலாளர் ஒரு மேடையில் திமுகவின் மிரட்டலுக்கு பயந்து அரசியலுக்கு வரவில்லை எனவும், தவெக தலைவர் விஜய் மிரட்டலுக்கு பயப்பட மாட்டார் எனவும் பேசியது சர்ச்சையானது. அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையும் படிக்க : நாதக ஆட்சியில் அனைவருக்கு அரசு வேலை… அதிரடியான தேர்தல் வாக்குறுதி… சீமான் வெளியிட்டார்!
‘விஜய்க்கு கருப்பு கொடி காட்டுவோம்’
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அண்மையில் என்னை பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அவரது பேச்சைக் கண்டித்து எனக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலம் பேசாது. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க : திமுகவுடன் சின்னம் தொடர்பான சர்ச்சை – என்ன முடிவெடுக்கப்போகிறார் கமல்?
இந்த நிலையில் இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜூனா, நடிகர் ரஜினிகாந்த் மீது எங்களுக்கு வெறுப்பு கிடையாது, அன்பு மட்டும்தான் இருக்கிறது. ரஜினியை சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமோ அல்லது பயந்துவிட்டார் என்பதையோ நான் சொல்லவில்லை. தி.மு.க.வின் சூழ்ச்சி என்றுதான் கூறினேன். நான் சொல்லவந்த நோக்கம் வேறு. நான் பேசியது உங்களுக்கு வருத்தத்தைக் கொடுத்திருந்தால், அதற்காக எனது வருத்தத்தையும், மன்னிப்பையும் பகிரங்கமாக கேட்டுக்கொள்கிறேன். வேறு யாருக்கும் பதில் கொடுக்க இங்க வரவில்லை. ரஜினிகாந்த் அறிக்கை படித்தேன். அவரது உணர்வுக்கு மரியாதை கொடுக்கிறேன் என தெரிவித்தார்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவை கண்டித்து ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டன. இதன் ஒரு பகுதியாக மேலூர் சட்டமன்ற தொகுத்திக்கு விஜய் பரப்புரைக்கு வந்தால், அவருக்கு கருப்பு கொடி காட்டுவோம் என ரஜினி ரசிகர்கள் தெரிவித்தனர். இதனிடையே ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவை கண்டிக்காத அக்கட்சி தரைவர் விஜய்யை கண்டிப்பாதகவும் விஜய் மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு வந்தால் அவருக்கு கருப்பு கொடி காட்டப்டும் என ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ராஜ பாண்டியன் தெரிவித்துள்ளார்.