ஜனநாயக கடமையை புறக்கணித்த செந்தில் பாலாஜி.. திமுக நிர்வாகிகள் கூறிய காரணம்…!
Senthil Balaji Did Not Vote : தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடைசி வரை தனது வாக்கை செலுத்தவில்லை. இதற்கான காரணத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளும், அவரது ஆதரவாளர்களும் தெரிவித்துள்ளது. என்ன அது.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்து வந்தவர் செந்தில் பாலாஜி. இவர், கரூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏவாக தேர்வானார். பின்னர், அமைச்சராக இருந்து வந்த போது, ஊழல் புகாரில் கைதாகி சிறை சென்ற நிலையில், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு கரூர் தொகுதியில் இருந்து தீவிர தேர்தல் பணி மற்றும் கட்சி பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்று ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் இருந்து கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். இதனிடையே, கோயம்புத்தூர் மற்றும் கரூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் செந்தில் பாலாஜி தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி
கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டாலும், அவருக்கு கரூர் தொகுதியில் தான் வாக்கு உள்ளது. எனவே, அவர் வாக்குப்பதிவு நாளில் கோயம்புத்தூரில் இருந்து கரூருக்கு சென்று தனது வாக்கை செலுத்தி விட்டு பின்னர் மீண்டும் கோயம்புத்தூர் திரும்புவார் என்று அவரது ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, கரூர் தொகுதிக்குள்பட்ட ராமேஸ்வரபட்டி புதுப்பாளையத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் செந்தில் பாலாஜி வாக்கு பதிவு செய்வது வழக்கமாகும்.
மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தல் – அதிக வாக்குகள் பதிவான டாப் 10 மாவட்டங்கள்




கடைசி வரை வாக்களிக்க வராத செந்தில் பாலாஜி
ஆனால், வாக்குப்பதிவு நாளில் காலை செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வாக்களிப்பதற்காக வந்திருந்தார். அவர் தனது வாக்கை செலுத்தி விட்டு வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறிய போது, செந்தில் பாலாஜி எப்போது வாக்களிக்க வருவார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அண்ணன் செந்தில் பாலாஜி பிறகு வந்து தனது வாக்கை செலுத்துவார் என்று கூறி சென்றார். ஆனால், மாலை 6 மணி வரை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவும் ஆன செந்தில் பாலாஜி கடைசி வரை தனது வாக்கை செலுத்துவதற்கு வரவில்லை.
செந்தில்பாலாஜி வாக்களிக்காததற்கு காரணம்
கோயம்புத்தூர் தொகுதியில் திமுக பொறுப்பாளராக இருந்து வரும் செந்தில் பாலாஜி தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த காரணத்தால், அவர் வாக்களிக்க வரவில்லை என்றும், வாக்குப்பதிவின் போது, கோவை தெற்கு தொகுதியில் ஏதேனும் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டால் அதனை முன் நின்று சமரசம் செய்வதற்காக அவர் வாக்குப்பதிவு செய்ய செல்லாமல் இருந்திருக்கலாம். இதன் காரணமாகவே கரூரில் ஓட்டு போடுவதற்காக செந்தில் பாலாஜி செல்லவில்லை என்று திமுக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தல்: முதல்வர் வேட்பாளர்களின் தொகுதி – எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன?