AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சட்டமன்ற தேர்தல் – அதிக வாக்குகள் பதிவான டாப் 10 மாவட்டங்கள்

TN Election 2026 : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு பெரும்பாலான வாக்குசாவடிகளில் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் மாலை 6 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 84.51 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் மாவட்ட வாரியாக விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சட்டமன்ற தேர்தல் – அதிக வாக்குகள் பதிவான டாப் 10 மாவட்டங்கள்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 23 Apr 2026 21:04 PM IST

சென்னை, ஏப்ரல் 23 : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் மாலை 6 மணியுடன் தேர்தல் நிறைவடைந்துள்ளது. ஒரு சில தொகுதிகளில் மட்டும் தாமதமாக வந்த வாக்காளர்களுக்காக டோக்கன் வழங்கப்பட்டு 8 மணி வரை வாக்குப்பதிவு  நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாலை 6 மணி வரை தமிழ்நாட்டில்  84.29 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிக வாக்குகள் பதிவாகிய டாப் 10 மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் 84.51 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இது தமிழ்நாட்டில் கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இது தான் அதிகம் என கூறப்படுகிறது.இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது . அதே போல மாவட்ட வாரியாக அதிக வாக்குகள் குறித்து விவரங்களும் வெளியாகியுள்ளன. அதில் டாப் 10 மாவட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிக்க : வாக்குச்சாவடியில் உச்சக்கட்ட பரபரப்பு.. தலைமை காவலருக்கு கத்திக்குத்து.. முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்!

  1. கரூரில் அதிகபட்சமாக 91.92 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
  2. சேலத்தில் 90.19 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
  3. 3வதாக திருப்பூரில் 89.8 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
  4. ஈரோட்டில் 89.77 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
  5. நாமக்கல்லில் 89.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
  6. திண்டுக்கல்லில் 88.29 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
  7. ராணிப்பேட்டையில் 88.58 சதவிகித வாக்குள் பதிவாகியுள்ளன.
  8. திருப்பத்தூரில் 88.22 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
  9. வேலூரில் 87.74 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
  10. விழுப்புரத்தில் 87.67 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் விவரம்

 

தமிழ்நாட்டில் நடைபெற்ற எஸ்ஐஆர் பணிகள் காரணமாக முதன்முறையாக 84.69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை விட சுமார் 29 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் அதிகபட்சமாக 93.05 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.  குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.41 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : வாக்குச்சாவடியில் ரகளை… வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு… சுயேட்சை உள்பட 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம்புதூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் 6 மணிக்கு மேலும் வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகப்பட்டுள்ளது. டோக்கன் பெற்றவர்கள் வாக்களித்து முடித்த பின் எந்திரங்களுக்கு சீல் வைத்து அனுப்பி வைக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Follow Us