AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Election Polling Percent: வரலாறு படைத்த தமிழகம்.. 84.51% வாக்குகள் பதிவு..

2026 Assembly Election Poll Percent: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், இதுவரை இல்லாத ஒரு புதிய வரலாற்றுச் சாதனையை தமிழக மக்கள் படைத்துள்ளனர். மாலை 6:00 மணி நிலவரப்படி, தமிழக முழுவதும் கிட்டத்தட்ட 84.51% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Tamil Nadu Election Polling Percent: வரலாறு படைத்த தமிழகம்.. 84.51% வாக்குகள் பதிவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 23 Apr 2026 21:25 PM IST

ஏப்ரல் 23, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், இதுவரை இல்லாத ஒரு புதிய வரலாற்றுச் சாதனையை தமிழக மக்கள் படைத்துள்ளனர். மாலை 6:00 மணி நிலவரப்படி, தமிழக முழுவதும் கிட்டத்தட்ட 84.51% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேர்தலிலிருந்து இதுவரை பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவு சதவீதமாகும். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-இல் அதிகபட்சமாக 4.83 கோடி பேர் வாக்களித்துள்ளனர். கடந்த தேர்தலை ஒப்பிடுகையில், சுமார் 20 லட்சம் பேர் அதிகமாக வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் (SIR) பிறகு நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். இந்த பணிகளுக்குப் பிறகு, தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 5.73 கோடியாக குறைக்கப்பட்டது. இதற்கு முன்பு 6 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்கள் காத்திருந்து வாக்களிக்கலாம் – சென்னை தேர்தல் அலுவலர் குமரகுருபரன்..

நிறைவடைந்த வாக்குப்பதிவு:

காலை 7:00 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 91.92% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.46% வாக்குகள் பதிவாகியுள்ளன.

1952 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களை ஒப்பிடுகையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில்தான் அதிகபட்ச வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

  • 2001 – 59.07%
  • 2006 – 70.82%
  • 2011 – 78.01%
  • 2016 – 74.24%
  • 2021 – 72.73%
  • 2026 – 84.51%

தொகுதி வாரியாக பார்க்கும்போது, தமிழகத்தில் அதிகபட்சமாக வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் 93.50% வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மே 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பின்னர் சுற்றுவாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்யப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் முக்கியமான நாள் மே 4 ஆகும்.

Follow Us