AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சட்டமன்ற தேர்தல்: முதல்வர் வேட்பாளர்களின் தொகுதி – எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன?

இந்த சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி, திமு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதசார்பற்ற கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகின்றன.  இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன என பார்க்கலாம். 

சட்டமன்ற தேர்தல்: முதல்வர் வேட்பாளர்களின் தொகுதி  – எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன?
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி கே.பழனிசாமி - சீமான் - விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 23 Apr 2026 21:53 PM IST

சென்னை, ஏப்ரல்  23 : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் மாலை 6 மணியுடன் தேர்தல் நிறைவடைந்துள்ளது. ஒரு சில தொகுதிகளில் மட்டும் தாமதமாக வந்த வாக்காளர்களுக்காக டோக்கன் வழங்கப்பட்டு 8 மணி வரை வாக்குப்பதிவு  நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாலை 6 மணி வரை தமிழ்நாட்டில்  84.29 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

முதல்வர் வேட்பாளர்கள் தொகுதி நிலவரம்

இந்த சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி, திமு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதசார்பற்ற கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகின்றன.  இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன என பார்க்கலாம்.

இதையும் படிக்க : வாக்குச்சாவடியில் உச்சக்கட்ட பரபரப்பு.. தலைமை காவலருக்கு கத்திக்குத்து.. முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்!

  • முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 86.1 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 92.03 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 74.05 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 89.71 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • தவெக தலைவர் விஜய் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் 81.77  சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் விவரம்

 

தமிழ்நாட்டில் நடைபெற்ற எஸ்ஐஆர் பணிகள் காரணமாக முதன்முறையாக 84.69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை விட சுமார் 29 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் அதிகபட்சமாக 93.05 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.  குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.41 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : வாக்குச்சாவடியில் ரகளை… வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு… சுயேட்சை உள்பட 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம்புதூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் 6 மணிக்கு மேலும் வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகப்பட்டுள்ளது. டோக்கன் பெற்றவர்கள் வாக்களித்து முடித்த பின் எந்திரங்களுக்கு சீல் வைத்து அனுப்பி வைக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Follow Us