AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Election 2026 Results: வாக்கு எண்ணிக்கை… 9 மணி நிலவரம்.. திமுக-அதிமுகவுக்கு டஃப் கொடுக்கும் தவெக!

Tamil Nadu Assembly Election 2026 Results: தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில், 9 மணி நிலவரப்படி திமுக, அதிமுக, தவெக, நாதக ஆகிய கட்சிகள் தொகுதிகள் வாரியான பதிவான வாக்குகள்.

Tamil Nadu Election 2026 Results: வாக்கு எண்ணிக்கை… 9 மணி நிலவரம்.. திமுக-அதிமுகவுக்கு டஃப் கொடுக்கும் தவெக!
9 மணி நிலவரம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 04 May 2026 09:21 AM IST

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று திங்கள் கிழமை மே 4- ஆம் தேதி நடைபெற்றது. இதில், காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன. தற்போது, 9 மணி நிலவரப்படி, திராவிட முன்னேற்ற கழகம் 26 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 19 தொகுதிகளிலும் , தமிழக வெற்றி கழகம் 19 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகம் 31 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை பெற்றது, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 25 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 25 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இந்த இரு கட்சிகளும் 25 தொகுதிகளில் சரிக்கு சமமாக முன்னிலை வகித்து வருகிறது. ஆனால், தற்போது வரை நாம் தமிழர் கட்சி தபால் வாக்கு எண்ணிக்கையில் ஒரு வாக்கை கூட பெறவில்லை.

அரசியல் தலைவர்கள் முன்னிலை விவரம்

இதில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதல்வர் மு. க. ஸ்டாலின் 800 வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார். இதேபோல, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார். எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் முன்னிலை வகித்து வருகிறார். இதே போல, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியிலும் விஜய் முதல் இடம் பிடித்து வருகிறார்.

கொளத்தூர் தொகுதியில் தவெக முன்னிலை

முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தவெக வேட்பாளர் பாபு முன்னிலை . தவெக 471 வாக்குகள் பெற்ற நிலையில் திமுக 171 வாக்குகள் பெற்று பின்னடைவு. 9:15 மணி நிலவரப்படி தமிழக வெற்றி கழகம் 43 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 30 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி 28 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது.

Follow Us