Assembly Election Result : தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? இன்று வெளியாகிறது மக்களின் இறுதி தீர்ப்பு!

Tamil Nadu Assembly Elections Result: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இதில், எந்தக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டு கால எதிர்காலம் யார் கையில் என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தும்.

Assembly Election Result : தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? இன்று வெளியாகிறது மக்களின் இறுதி தீர்ப்பு!

முதல்வர் என்கிற சிம்மாசனத்தில் அமரப்போவது யார்?

Updated On: 

04 May 2026 06:56 AM

 IST

தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி அரசின் பதவிக்காலம் நிறைவடைந்ததையொட்டி, கடந்த மார்ச் 15- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அத்துடன் புதுச்சேரி, அசாம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சார பயணத்தை தொடங்கி விட்டன. அத்துடன் மக்களை முன்னதாகவே கவர்வதற்காக பல்வேறு விதமான தேர்தல் அறிவிப்புகளை ஒவ்வொரு கட்சிகளும் வெளியிட தொடங்கியது. இதனால், தமிழக அரசியல் களம் படுவேகமாக சூடு பிடிக்கத் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவியது.

சுமார் 40 நாள்கள் அனல் பறந்த தேர்தல் பிரசாரம்

சுமார் 40 நாட்கள் வரை தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்தது. இதனிடையே, அந்த கட்சி ஆட்சி அமைக்கும், இந்த கட்சி ஆட்சி அமைக்கும், இந்த கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்பன உள்ளிட்ட கருத்துக்கணிப்புகள் ஒவ்வொரு அமைப்புகள் சார்பில் வெளியிடப்பட்டு வந்தன. இதே போல, ஒவ்வொரு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் நமது கட்சி நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து வந்தனர். அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற முடிந்தது.

மேலும் படிக்க: வாக்கு எண்ணிக்கை மையங்களில் புதிய பாதுகாப்பு வளையம்.. ‘கியூ.ஆர். கோடு’ அடையாள அட்டைகள் அறிமுகம்!

காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன. இதில், இன்று திங்கள்கிழமை மே 4- ஆம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்க உள்ளன. இதைத் தொடர்ந்து, சுமார் 8:30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டு தொகுதிகள் வாரியாக கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்கள் வெளியிடப்பட உள்ளன. இந்த பணிகள் சுமார் இரவு வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் 5 ஆண்டு கால எதிர்காலம் யார் கையில்

இதில், எந்த கட்சி ஆட்சி அமைக்கும், எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெறும், எவ்வளவு வாக்கு சதவீதம் பெறும். இதற்கு அடுத்தடுத்த நிலைகளில் எந்தெந்த கட்சிகள் வரும் என்பது குறித்த முழு தகவல் இரவுக்குள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, தமிழகமே பெருமளவில் எதிர்பார்த்த 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளன. அதன்படி, தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டு கால எதிர்காலம் எந்த கட்சியின் வசம் செல்ல போகிறது என்பதும் தெரியவரும்

தொகுதி வாரியாக விவரம் அறிய

மேலும் படிக்க: தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள புதிய இணையதளம்.. மொபைல் செயலியும் அறிமுகம்..

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..