Virudhachalam Election Result: விருத்தாசலம் தொகுதியில் கோலோச்சப் போவது யார்? இன்று வெளியாகிறது மக்கள் தீர்ப்பு!
Virudhachalam Assembly Election Result 2026: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. இதில், விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் எந்த கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறப் போகிறார் என்பதை முழு விவரங்களுடன் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த தொகுதியானது தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் முக்கியமான தொகுதிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் கடந்த 2024- ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் தரவுகளின் அடிப்படையில் 2,75,000 முதல் 2,85,000 வரை வாக்காளர்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விருதாச்சலம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் 77,064 வாக்குகள் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ஜே. கார்த்திகேயன், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் என். அமுதா ஆகியோர் தோல்வியை தழுவினர்.
2026 தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்
இந்தத் தேர்தலில் பாமக வேட்பாளர் ஜே. கார்த்திகேயனை 862 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் எம். ஆர். ஆர். ராதா கிருஷ்ணன் வெற்றி பெற்றிருந்தார். இந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வாக ராதாகிருஷ்ணன் இருந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி சார்பில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இ. எம். ஆர். எஸ். விஜய், அதிமுக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த டாக்டர் தமிழரசி ஆதிமூலம், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஆனந்தி தண்டபாணி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆகியோர் போட்டியிட்டனர்.
2021 – 2026 தேர்தல்களில் பதிவான வாக்குகள்
2021 தேர்தலில் விருதாச்சலம் தொகுதியில் 77.81 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. 2026 தேர்தலில் 86.09 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது, நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில், கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி வசமாக இருந்தது. இதேபோல, திமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு விருதாச்சலம் தொகுதி வசமாகும் என கூறப்படுகிறது.
விருத்தாசலம் தொகுதி தேர்தல் முடிவுகள்
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று மே 4- ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதில், விருதாச்சலம் சட்டமன்ற தொகுதியில் எந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெறுகிறார். அவர் பெரும் வாக்கு சதவீதம் என்ன. அவருக்கு அடுத்தடுத்த நிலைகளில் உள்ள வேட்பாளர்கள் குறித்த முழு விவரங்கள் பின்னர் பதிவு செய்யப்படும்.