AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Edappadi Election Result: மீண்டும் அதிமுகவின் கோட்டையான எடப்பாடி.. இபிஎஸ் அபார வெற்றி

Edappadi Assembly Election Result 2026: எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் "சொந்த ஊர்" என்ற சென்டிமென்ட் மற்றும் தொகுதியில் அவர் செய்துள்ள உள்கட்டமைப்பு வசதிகள் அவருக்குப் பெரும் பலம். 2021-ல் இருந்த அதே எழுச்சி இப்போதும் தொடர்வதாக அதிமுகவினர் கருதுகின்றனர்.

Edappadi Election Result: மீண்டும் அதிமுகவின் கோட்டையான எடப்பாடி.. இபிஎஸ் அபார வெற்றி
மாதிரிப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 04 May 2026 16:26 PM IST

தமிழகத்தில் கடந்த ஏப்.23ம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட கொளத்தூர் தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான இது, கடந்த சில தசாப்தங்களாக அக்கட்சியின் அசைக்க முடியாத கோட்டையாக உருவெடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி இந்தத் தொகுதியில் இதுவரை 7 முறை போட்டியிட்டுள்ளார் (1989, 1991, 1996, 2006, 2011, 2016, 2021). இதில் அவர் 5 முறை வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக, 2011 முதல் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.

2021 தேர்தலில் 66.27% வாக்குகளைப் பெற்று, எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.சம்பத்குமாரை விட சுமார் 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தமிழகத் தேர்தல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்பட்டது.

2026 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள்:

இந்நிலையில், இந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து திமுக தரப்பில் சி. காசி வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார். ஆளுங்கட்சியின் நலத்திட்டங்களை முன்வைத்து அவர் வாக்கு சேகரித்து வருகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில், பிரியதர்ஷினி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டதால், சுயேட்சை வேட்பாளரை அக்கட்சி இத்தொகுதியில் ஆதரித்துள்ளது. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் பாமக இணைந்திருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.

வெற்றி வாய்ப்பு குறித்த அலசல்:

எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் “சொந்த ஊர்” என்ற சென்டிமென்ட் மற்றும் தொகுதியில் அவர் செய்துள்ள உள்கட்டமைப்பு வசதிகள் அவருக்குப் பெரும் பலம். 2021-ல் இருந்த அதே எழுச்சி இப்போதும் தொடர்வதாக அதிமுகவினர் கருதினர். அதே சமயம், திமுக தனது அரசு இயந்திரத்தையும் நலத்திட்டங்களையும் (மகளிர் உரிமைத் தொகை போன்றவை) பயன்படுத்தி களம் கண்டது. பாமக-வின் வாக்குகள் இந்தத் தொகுதியில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்பதால், அதிமுக கூட்டணி கருத்துக்கணிப்புகளிலும் இத்தொகுதியில் முன்னிலை வகித்தது.

எடப்பாடி பழனிசாமி வெற்றி:

கருத்துக்கணிப்புளின் படி, காலை முதலே முன்னிலை வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 1,07,697 வாக்குகள் பெற்று,  அத்தொகுதியில் 69, 000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அங்கு யாரும் எதிர்பாராத திருப்பமாக தவெகவின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் திமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி, 2வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow Us