AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Bodinayakanur Election Result: போடிநாயக்கனூரில் 4வது முறையாக ஓபிஎஸ் அபார வெற்றி

Bodinayakanur Assembly Election Result 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போடி நாயக்கனூர் தொகுதியில் திமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக சார்பில் வி.டி.நாராயணசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் கலை அரசு மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எஸ்.பிரகாஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.

Bodinayakanur Election Result: போடிநாயக்கனூரில் 4வது முறையாக ஓபிஎஸ் அபார வெற்றி
போடிநாயக்கனூர் தேர்தல் முடிவுகள்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 04 May 2026 22:37 PM IST

கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற்ற 234 தொகுதிகளுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் போடிநாயக்கனூர் தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. காரணம் இதுவரை அதிமுக சார்பில் தேர்தலை சந்தித்து வந்த அவர் இந்த முறை திமுக சார்பில் தேர்தலை சந்திக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

போடிநாயக்கனூரில் ஓபிஎஸ் அபார வெற்றி

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மே 4,  2026 அன்று அறிவிக்கப்பட்ட நிலையில் போடிநாயக்கனூர் தொகுதியில் 4வது முறையாக அபார வெற்றி பெற்றுள்ளார்.  திமுகவின் சார்பில் போட்டியிட்ட  ஓ. பன்னீர்செல்வம் 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2011, 2016, 2021 தொகுதிகளைத் தொடர்ந்து 4வது முறையாக இந்த தேர்தலிலும் அபார வெற்றி பெற்றுள்ளார்.

இந்த தொகுதியில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், அதிகமு சார்பில் வி.டி.நாராயணசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் கலை அரசு மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எஸ்.பிரகாஷ் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் கிட்டத்தட்ட 2 லட்சத்து 61 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.இந்த தொகுதியில் தேயிலை, ஏலக்காய் விவாசயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டத்தில் கடந்த 1957 ஆம் ஆண்டு போடிநாயக்கனூர் தொகுதி உருவாக்கப்பட்டது. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுக ஜானகி அணி மற்றும் ஜெயலலிதா அணி என இரண்டாக பிரிந்தது. இந்த நிலையில் கடந்த 1989 ஆம் ஆண்டு தேர்தலில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். அப்போதில் இருந்து இந்த தொகுதி அதிமுகவின் பலம் வாய்ந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது.

இந்த தொகுதியில் கடந்த 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டன்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று ஓ.பன்னீர்செல்வம் பலம் வாய்ந்த வேட்பாளராக 4வது முறை களம் காண்கிறார். கடந்த 201 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அப்போது திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை விட 11,000வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். இந்த முறையும் அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் இந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

தன்னை 3 முறை வெற்றிபெற செய்த இந்த தொகுதி மக்களுக்காக ஓ.பன்னீர்செல்வம் அரசு பொறியியில் கல்லூரி, முந்தல் மற்றும் போடி மெட்டு சாலை விரிவாக்கம் போல நலத்திட்டங்களை அவர் செய்துள்ளார். இருப்பினும் மாம்பழ கூழ் தொழிற்சாலை மற்றும் போடியில் இருந்து சாக்குதூலுக்கு சாலை அமைக்க வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

Follow Us