AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

karur Election Result: யார் வசம் செல்கிறது கரூர் சட்டமன்ற தொகுதி? சஸ்பென்ஸிற்கு இன்று முற்றுப்புள்ளி!

karur Assembly Election Result 2026: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இதில், கரூர் சட்டமன்ற தொகுதியில் எந்த கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற முழு விவரங்களை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

karur Election Result: யார் வசம் செல்கிறது கரூர் சட்டமன்ற தொகுதி? சஸ்பென்ஸிற்கு இன்று முற்றுப்புள்ளி!
கரூர் தொகுதி தேர்தல் முடிவுகள்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 04 May 2026 06:40 AM IST

கரூர் மாவட்டத்தில் பொது தொகுதிகளில் ஒன்றாக கரூர் தொகுதி விளங்கி வருகிறது. இந்த தொகுதியில் கடந்த 2024- ஆம் ஆண்டு வாக்காளர்கள் பட்டியலின் அடிப்படையில் சுமார் 2,38,669 வாக்காளர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்காளர்கள் வசிக்கும் தொகுதியாக கரூர் சட்டமன்ற தொகுதி விளங்கி வருகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் செந்தில் பாலாஜி, அதிமுக சார்பில் எம். ஆர். விஜயபாஸ்கர், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர். கருப்பையா, மக்கள் நீதி மய்யம் சார்பில் எஸ். மோகன்ராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், 1,01,757 வாக்குகள் பெற்று செந்தில் பாலாஜி வெற்றி பெற்று எம். எல். ஏ. வாக தேர்வானார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட எம். ஆர். விஜயபாஸ்கர், கருப்பையா, மோகன்ராஜ் ஆகியோர் தோல்வியை தழுவினர். தற்போதைய எம். எல்.ஏவாக செந்தில் பாலாஜி இருந்து வருகிறார்.

அதிக வாக்குகள் பதிவான முதல் தொகுதி கரூர்

இதில், 84 சதவீதம் முதல் 88.33 சதவீத வாக்குகள் பதிவாகின. 2026 சட்டமன்ற தேர்தலில் கரூர் சட்டமன்ற தொகுதியில் மிக அதிகபட்சமாக 89.32 சதவீத வாக்குகள் பதிவாகி தமிழகத்திலேயே முதல் தொகுதி என்ற இடத்தை கரூர் தொகுதி பிடித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர், திமுக சார்பில் ஆசி. எம். தியாகராஜன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வி.பி. மதியழகன், நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி இந்த தொகுதியில் இருந்து மாறி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.

கரூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு

இதன் காரணமாக, கரூர் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே வேளையில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் வி.பி. மதியழகனுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தின் காரணமாக தவெகவுக்கு அனுதாப ஓட்டுகள் கிடைக்கும் எனவும் பரவலாக பேசப்படுகிறது. தற்போதைய எம். எல்.ஏவான செந்தில் பாலாஜி சொத்துக் குவிப்பு வழக்கு, டிரான்ஸ்பார்மர் ஊழல் உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கி சர்ச்சை எழுந்து வருவதால், கரூர் தொகுதியில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் எனவும் பேசப்படுகிறது.

மே 4- ஆம் தேதி தெரியும் தேர்தல் முடிவுகள்

இந்த நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கரூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று மே 4- ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இதில், எந்தக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுகிறார். அவர் பெரும் வாக்குகள் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

Follow Us