AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kariakudi Election Result: அதிமுகவின் கோட்டையாக இருக்கும் காரைக்குடி தொகுதி.. இந்த முறை வெற்றி யாருக்கு?

Assembly Election Result 2026: வளர்ச்சி கண்டுள்ள இந்த தொகுதியில் மக்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் போதுமான அளவில் இல்லை, வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ளன என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும், சாலை வசதி மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Kariakudi Election Result: அதிமுகவின் கோட்டையாக இருக்கும் காரைக்குடி தொகுதி.. இந்த முறை வெற்றி யாருக்கு?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 04 May 2026 07:20 AM IST

காரைக்குடி சட்டமன்ற தொகுதி என்பது சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய தொகுதியாகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் இது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த தொகுதி கிராமப்புறமும் நகர்ப்புறமும் கலந்து காணப்படும் பகுதியாகும். காரைக்குடி பகுதி செட்டிநாடு பிராந்தியத்தைச் சேர்ந்ததாகும். செட்டிநாட்டின் வரலாறு, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட தொகுதியாக இது விளங்குகிறது. பல தேர்தல்களில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியுள்ளது.

இந்த பகுதியில் பெரும்பாலும் நகர வணிகர்கள், விவசாயிகள் மற்றும் சிறு தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். மேலும், வெளிநாடுகளில் வாழும் செட்டிநாடு மக்களுடன் இந்த தொகுதிக்கு நெருங்கிய தொடர்பும் உள்ளது.

அதிமுகவின் கோட்டையாக இருக்கும் காரைக்குடி:

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடி 75,954 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எச்.ராஜா 54,365 வாக்குகள் பெற்றார். மூன்றாம் இடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் நான்காம் இடத்தில் நாம் தமிழர் கட்சி இடம்பெற்றன.

மேலும் படிக்க: ஆக்கப்பொறுத்தவர்கள், ஆறப்பொறுங்கள்.. 10 இடங்களிலும் தேமுதிக வெற்றிப்பெறும் – பிரேமலதா விஜயகாந்த்..

இந்த தொகுதியின் அரசியல் வரலாற்றைப் பார்க்கும்போது, அதிமுக கட்சியின் ஆதிக்கம் சற்றே அதிகமாக உள்ளது. 1977ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக நான்கு முறை வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் காங்கிரஸ் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தொகுதியின் சிறப்புகள் மற்றும் பிரச்சனைகள்:

இந்த தொகுதியில் உள்ள முக்கியமான ஆன்மீக தலங்களில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மேலும், செட்டிநாடு பாரம்பரிய மாளிகைகள் அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகை தருகின்றனர். காரைக்குடி செட்டிநாடு கலாச்சாரத்தின் மையப்பகுதியாகவும் விளங்குகிறது.

வளர்ச்சி கண்டுள்ள இந்த தொகுதியில் மக்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் போதுமான அளவில் இல்லை, வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ளன என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும், சாலை வசதி மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு?

2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதி தனி கவனத்தை ஈர்த்துள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல், காங்கிரஸ் தரப்பில் எஸ். மாங்குடி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தரப்பில் தேர்போகி பாண்டி, தமிழக வெற்றி கழகம் தரப்பில் டி.கே. பிரபு உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக ஆதிக்கம் இருந்தாலும், இந்த முறை தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் வெற்றி வாய்ப்பு பெற்றிருக்கலாம் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Follow Us