2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்.. வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் எத்தனை பேர்?.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட முழு விவரம்!
Tamilnadu Assembly Election: மே 4ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்காகத் தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான இறுதிக்கட்ட ஆலோசனைகளைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். மே.4ம் தேதி காலை 8.00 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும். காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) உள்ள வாக்குகள் எண்ணப்படும்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்.23ம் தேதி நிறைவடைந்த நிலையில், அதுகுறித்த விரிவான புள்ளிவிவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் எத்தனை வாக்காளர்கள் வாக்கு செலுத்தியுள்ளனர். எத்தனை பேர் வாக்கு செலுத்தவில்லை என்பது உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு, தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இந்தப் புள்ளிவிவரங்கள் மற்றும் நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்த முக்கியத் தகவல்களை இக்கட்டுரையில் காணலாம்.
இதையும் படிக்க: Tamil Nadu Election 2026 Results Live Streaming: தமிழ்நாடு தேர்தல் முடிவுகளை எங்கு, எப்போது பார்க்கலாம்?.. முழு விவரம்!!
வாக்காளர் புள்ளிவிவரங்கள்:
இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தமிழகத்தில் இம்முறை வாக்குப்பதிவு மிகத் தீவிரமாக நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு பின்னர் தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,73,43,291 ஆக இருந்தது. இதில் வாக்களித்தவர்கள் 4,87,98,833 பேர் ஆவார்கள். அதாவது சுமார் 85.10% ஆகும். இதில், வாக்களிக்காதவர்கள் 85,44,458 பேர் ஆவர்.
பாலின வாரியான வாக்குப்பதிவு:
வழக்கம் போலவே இந்த முறையும் ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் வாக்களித்துள்ளனர். அதன்படி, பெண்கள் 2,52,59,596 பேரும், ஆண்கள் 2,35,34,720 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 4,517 பேரும் வாக்களித்துள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள்:
மே 4ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்காகத் தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான இறுதிக்கட்ட ஆலோசனைகளைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். மே.4ம் தேதி காலை 8.00 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும். காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) உள்ள வாக்குகள் எண்ணப்படும்.
வாக்கு எண்ணிக்கையையொட்டி, அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மற்றும் சிசிடிவி (CCTV) கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிந்தவுடன், தேர்தல் பார்வையாளரின் ஒப்புதலுக்குப் பிறகு ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
மேலும் படிக்க: “வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் பணியாற்ற வேண்டும்”.. முகவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்:
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில், டெல்லி தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் காணொளி காட்சி வாயிலாகத் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் வாக்கு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பு மற்றும் தடையற்ற முறையில் முடிவுகளை அறிவிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தின் அரசியல் சூழலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. முடிவுகளைத் தெரிந்துகொள்ள மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.