AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாக்கு எண்ணிக்கை மையங்களில் புதிய பாதுகாப்பு வளையம்.. ‘கியூ.ஆர். கோடு’ அடையாள அட்டைகள் அறிமுகம்!

‘QR Code’ ID Cards Introduced by ECI: தேர்தல் ஆணையம் கடந்த ஓராண்டில் மேற்கொண்ட 30க்கும் மேற்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (BLO) இதே போன்ற கியூ.ஆர். கோடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் புதிய பாதுகாப்பு வளையம்.. ‘கியூ.ஆர். கோடு’ அடையாள அட்டைகள் அறிமுகம்!
கியூ.ஆர். கோடுடன் கூடிய பாதுகாப்பு
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 01 May 2026 08:14 AM IST

தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையையும் பாதுகாப்பையும் மேம்படுத்தும் நோக்கில், இந்திய தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்குள் அங்கீகாரம் பெறாத நபர்கள் அத்துமீறி நுழைவதைத் தடுப்பதற்காக, கியூ.ஆர். கோடு (QR Code) வசதியுடன் கூடிய நவீன புகைப்பட அடையாள அட்டைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த அட்டைகள் தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக ‘இ.சி.ஐ. நெட்’  தளம் வழியாக உருவாக்கப்படுகின்றன.

மேலும் படிக்க: வெற்றிப்பெற்று நேராக பனையூர் வாருங்கள்.. நான் காத்திருப்பேன் – வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை..

அமல்படுத்தப்படும் இடங்கள்:

இந்த புதிய பாதுகாப்பு நடைமுறை வரும் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது முதன்முறையாகச் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. இதுமட்டுமின்றி, இதே காலகட்டத்தில் 5 மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் இந்த முறை பின்பற்றப்படும். வருங்காலத்தில் நாட்டின் அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

மூன்று அடுக்கு பாதுகாப்பு முறை:

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் நுழையும் நபர்களைச் சரிபார்க்க மூன்று நிலைகளிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் மற்றும் இரண்டாம் நிலை இப்பகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டைகள் அதிகாரிகள் மூலம் நேடியாகச் சரிபார்க்கப்படும். மூன்றாம் மற்றும் உள் பாதுகாப்பு வளையம் இதுவே மிக முக்கியமான பாதுகாப்பு அடுக்கு ஆகும். இங்கு கியூ.ஆர். கோடு ஸ்கேனர் மூலம் அடையாள அட்டையில் உள்ள குறியீடு சரிபார்க்கப்பட்டு, அது உண்மையானது என உறுதி செய்யப்பட்டால் மட்டுமே ஒருவர் உள்ளே அனுமதிக்கப்படுவார்.

யாருக்கெல்லாம் இந்த அடையாள அட்டை?

வாக்கு எண்ணும் மையத்திற்குள் பணியாற்றவும், பார்வையிடவும் தகுதியுள்ள கீழ்க்கண்ட நபர்களுக்கு இந்த உயர்தொழில்நுட்ப அட்டைகள் வழங்கப்படும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள். வாக்கு எண்ணிக்கை பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள். தொழில்நுட்ப உதவிக்காக வரும் நிபுணர்கள். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள். வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்.

மேலும் படிக்க: திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது – கருத்துக்கணிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து..

நிர்வாக ரீதியான உத்தரவு:

தேர்தல் ஆணையம் கடந்த ஓராண்டில் மேற்கொண்ட 30க்கும் மேற்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (BLO) இதே போன்ற கியூ.ஆர். கோடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளின் நம்பகத்தன்மையையும், பாதுகாப்புத் திறனையும் உறுதி செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அனைவரும் இந்த புதிய விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Follow Us