AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொடர்ந்து 2-வது நாளாக தங்கம் விலை உயர்வு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold Prices rise: தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தாலும், இன்று வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, சென்னையில் இன்று 1 கிராம் வெள்ளி எவ்வித மாற்றமும் இன்றி ரூ.285 என்ற விலைக்கு விற்கப்படுகிறது.

தொடர்ந்து 2-வது நாளாக தங்கம் விலை உயர்வு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
மாதிரிப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 30 May 2026 11:06 AM IST

Gold Price Today: ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. அந்தவகையில், நேற்றும், இன்றும் ஏறுமுகத்தில் சென்று நுகர்வோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அதன்படி, இன்று சனிக்கிழமை (மே 30, 2026) ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இத்தொடர் உயர்வு, திருமண சுபநிகழ்ச்சிகளுக்குத் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருக்கும் நுகர்வோர்கள் மற்றும் இல்லத்தரசிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: உங்களுக்கே தெரியாமல் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையுதா?.. இவையெல்லாம் காரணமாக இருக்கலாம்!

ஆபரணத் தங்கம் விலை:

சென்னையில் நுகர்வோரால் அதிகம் வாங்கப்படும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.100 உயர்ந்துள்ளது. அதன்படி, நேற்று ஒரு கிராம் 14,500க்கு விற்கப்பட்ட தங்கம், இன்று 14,600ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 800 உயர்ந்து, இன்று சவரன் 1,16,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சுத்தத் தங்கம் விலை (24 கேரட்):

வணிக ரீதியிலான முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலையும் இன்று கணிசமான அளவு உயர்வைக் கண்டுள்ளது. அதன்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ரூ.15,928 ஆக விற்கப்படுகிறது. 10 கிராம் சுத்தத் தங்கத்தின் விலை நேற்று ரூ.1,58,180 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.1,100 உயர்ந்து ரூ.1,59,280 ஆக எகிறியுள்ளது.

வெள்ளி விலை நிலவரம்:

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தாலும், இன்று வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, சென்னையில் இன்று 1 கிராம் வெள்ளி எவ்வித மாற்றமுமின்றி ரூ.285 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. அதேபோல், 1 கிலோ வெள்ளியும் (பார் வெள்ளி) இன்று எவ்வித உயர்வும் இன்றி ரூ.2,85,000 என்ற நிலையான விலையிலேயே வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: எம் ஆதார் செயலிக்கு பதிலாக புதிய ஆதார் செயலி அறிமுகம்.. புதிய அம்சங்கள் என்ன என்ன?

சந்தை நிபுணர்களின் கணிப்பு:

சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை, அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கம் மற்றும் மத்திய வங்கிகள் தங்கத்தைச் சேமிப்புப் பொருளாக அதிகளவில் வாங்குவது போன்ற காரணங்களால் உலகளாவிய சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதன் நேரடித் தாக்கமே இந்தியாவிலும், குறிப்பாகச் சென்னை போன்ற தென்னகச் சந்தைகளிலும் தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தைத் தொடுவதற்குக் முக்கியக் காரணம் எனச் சந்தை வல்லுநர்கள் விவரிக்கின்றனர்.

Follow Us