AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : தங்கம், வெள்ளி விலை சரிவை சந்தித்தது.. இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold and Silver Price Reduced | தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்கு நாள் கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில், சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : தங்கம், வெள்ளி விலை சரிவை சந்தித்தது.. இன்றைய விலை நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 May 2026 11:11 AM IST

சென்னை, மே 16 : மேற்கு ஆசியா போர் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவை சந்தித்துள்ளது. அதாவது தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்

மேற்கு ஆசியா போர் காரணமாக உலக நாடுகள் கடும் சவால்களை எதிர்க்கொண்டு வருகின்றன. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக உலக நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை சந்தித்து வருகிறது. அதன் விளைவாக நேற்று (மே 15, 2026) இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை சந்தித்தது. இத்தகைய சூழலில் தற்போது சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : எரிபொருள் விலை உயர்வு.. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்.. லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.14,750-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,18,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.290-க்கும், கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.

Follow Us