Gold Price : அதிரடியாக சரிந்த தங்கம், வெள்ளி.. இன்றைய நிலவரம் என்ன?
Gold and Silver Price Reduced In Chennai Today | சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்றைய நிலவரப்படி உள்ள தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, மே 15 : மேற்கு ஆசியா போர் காரணமாக பல்வேறு சிக்கல்களை உலக நாடுகள் சந்தித்து வருகிறது. அந்த வகையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தங்கம் வாங்குவதில் இந்தியர்களுக்கு உருவாகியுள்ள மிகப்பெரிய சிக்கல்
ஏற்கனவே மேற்கு ஆசியா போர் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் தான் இந்திய பொதுமக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது, அந்நிய செலாவணியை கட்டுப்படுத்த ஒரு ஆண்டுக்கு தங்கத்தை வாங்க வேண்டாம் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்களை இறக்குமதி செய்வதற்கான வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வை சந்தித்தது.
இதையும் படிங்க : 7.5% வட்டி.. வெறும் ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம்.. சிறந்த பலன்களை பெற முடியும்!
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
இந்திய அரசு இறக்குமதி வரியை உயர்த்தாத வரை ரூ.15,000-க்குள் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம், வரி உயர்வுக்கு பிறகு ரூ.15,000-க்கு மேல் உயர்ந்தது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தான் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது.
இதையும் படிங்க : தங்க நாணய விற்பனை நிறுத்தம்.. தமிழ்நாடு ஜுவல்லர்ஸ் சம்மேளம் முக்கிய முடிவு.. காரணம் என்ன?
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.305-க்கும், ஒரு கிலோ ரூ.3,05,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.