AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வரலாற்று தருணம்.. விண்வெளி மையத்திற்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா!

Shubhanshu Shukla ISS : சர்வதேச விண்வெளி மையத்திற்குள் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா நுழைந்தார். இதன் மூலம்,  முதல்முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.  சுபான்ஷு சுக்லா உட்பட  நான்கு வீரர்களும் சர்வதேச விண்வெளி மையத்திற்குள் நுழைந்துள்ளனர். 

வரலாற்று தருணம்.. விண்வெளி மையத்திற்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா!
சுபான்ஷு சுக்லாImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 26 Jun 2025 18:35 PM IST

சர்வதேச விண்வெளி மையத்திற்குள் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா (shubhanshu shukla) நுழைந்தார். இதன் மூலம்,  முதல்முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் (International Space Station) நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.  முன்னதாக, இந்திய வீரர் ராகேஷ் சர்மா விண்வெளிக்கு சென்றிருந்தார்.  1984ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த ராகேஷ் சர்மா சோவியத் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்றனர். அங்கு 7 நாட்கள் தங்கி இருந்தார். இதன் மூலம் 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது இந்திய வீரராக சுபான்ஷு சுக்லா உள்ளார்.  மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். டிராகன் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 2025 ஜூன் 25ஆம் தேதியான நேற்று மதியம் 12 மணியளவில் சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்களும் புறப்பட்டனர். சுமார் 28 மணி நேர பயணத்திற்கு பிறகு, தற்போது சர்வதேச விண்வெளி யைமத்திற்குள் நுழைந்துள்ளனர்.

விண்வெளி மையத்திற்குள் நுழைந்த  சுபான்ஷு சுக்லா

சுபான்ஷு சுக்லா உட்பட  நான்கு வீரர்களும் சர்வதேச விண்வெளி மையத்திற்குள் நுழைந்துள்ளனர்.  அதாவது, அமெரிக்காவின் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் விஸ்னீவ்ஸ்கி மற்றும் ஹங்கேரிய திபோர் கபு  ஆகியோர் சுபான்ஷு சுக்லாவுடன் விண்வெளி மையத்திற்குள் நுழைந்துள்ளனர்.

சர்வதேச விண்வெளி மையத்திற்குள் நுழைந்த அவர்களை,  சக வீரர்கள் ஆரத்தழுவி வரவேற்பு அளித்தனர்.  தொடர்ந்து, அவர்களுக்கு வரவேற்பு பானத்தையும் சக வீரர்கள் வழங்கினர்.  விண்வெளி மையத்திற்கு சென்ற சுபான்ஷு சுக்லா உட்பட 3 வீரர்களுக்கு 14 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.

விண்வெளி மையத்திற்குள் நுழைந்த காட்சி

14 நாட்கள் ஆராய்ச்சி

இந்த 14 நாட்கள் சுபான்ஷு சுக்லா குழுவினர் 60 சோதனைகளை மேற்கொள்ள உள்ளனர். குறிப்பாக, விவசாயம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர். அதாவது, பயிர் விதைகளின் முளைத்தல் செய்முறை, வளர்ச்சியில் விண்வெளியி பயணத்தை தாக்குங்கள், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.  மேலும், ஈர்ப்பு விசை குறித்தும், உயிரினங்கள் ஈர்ப்பு விசைக்கு எவ்வாறு பொறுத்துகின்றன என்பது குறித்து அவர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us